செம்மை மாதர்தம் ஞானச் செருக்கு
செம்மை மாதர்தம்
ஞானச் செருக்கு
××××××××××××××××
வீட்டினுள் அடக்கியே
விட்டில்பூச்சியாய் நசுக்கினர்
பாட்டினுள் பாரதியும்
புரட்சியை விதைத்திடவே
காட்டின் புலிகளாய்
கர்சித்து வெளியேறியே
நாட்டிய பேரொளியாகி
நாட்டை ஆண்டனரே
எட்டாதக் கல்வியை
எட்டியேப் பிடித்தனர்
எட்டியுதைத்த பந்தும்
எல்லைதொட வட்டமானதே(கோல்)
பூட்டிய கதவுகளை
புத்தியால் திறந்தனர்
வாட்டிய ஆண்களோடு
வானிலும் பறந்தனரே
சமத்துவ புறா ஞான.அ.பாக்யராஜ்