திறமையின் திறவுகோல்

திறமையின் திறவுகோல் !
———

திறமையின் திறவுகோல்
திண்ணமாய் முயற்சியே /
பொறுமையாய்க் கற்றிடு
புயலென செயல்படு /

தெளிவான திட்டங்கள்
தீர்க்கமாய் முடிவுகள் /
பளிங்கென நெஞ்சிலே
பதிந்திடல் சிறப்பே /

ஓயாது சிந்தித்து
ஒழுங்காக செய்வித்தால் /
தீயதும் நேராதே
தொட்டதும் துலங்குமே /

பிறருடைய உதவிகள்
பிசகாத உறவுகள் /
மறந்திடா புகழுரை
மன்னித்தல் உயர்த்துமே /

தன்னையே நம்பியும்
துணைகளை அமர்த்தியும் /
பின்னமே இல்லாமல்
உழைத்திட வெற்றியே !!

-யாதுமறியான்.

எழுதியவர் : யாதுமறியான். (26-Jan-24, 5:59 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 399

மேலே