கை என்பது
👏👏👏👏👏👏👏👏👏👏👏
*கை என்பது.....*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
👏👏👏👏👏👏👏👏👏👏👏
காயம் படாதக் கல்
சிலையாவதில்லை...
நெருப்பு படாதத் தங்கம்
நகையாவதில்லை
உறைக்காதச் சந்தனம்
மணப்பதில்லை
சிப்பிக்குள் அடைபடாத தண்ணீர்
முத்தாவதில்லை....
தீட்டப்படாத வைரம்
ஔி பெறுவதில்லை
இளைஞனே!
போராடாத மனிதன்
புகழ் பெறுவதில்லை.....!
சாதித்தவனுக்கே
கைத்தட்டியே சாக வேண்டுமா?
உனக்காக நான்கு பேர்
கைத்தட்ட வேண்டாமா..?
"கை என்பது
தட்டுவதற்கு மட்டுமல்ல
தட்ட வைப்பதற்கும்தான்....!"
உட்கார்ந்திருந்தால்
உன் ஆற்றல் உனக்கே தெரியாது...
இந்த உலகத்திற்கு
எப்படி தெரியும்?
எரிகின்ற சூரியன்தான்
உலகத்தின் மூலமாக உள்ளது....
ஓடுகின்ற ஆறுகள்தான்
மனிதர்களிடம்
நாகரீகம் வளர்த்திருக்கிறது....
பிளக்கின்ற அணுவில்தான்
ஆற்றல் பிறக்கிறது....
நீயும் இயங்கினால்தான்
எதையாவது சாதிக்க முடியும்
உன்னாலும் முடியும்....
வாழ்க்கை
ஒரு போராட்டம்தான்
போராடிப் பார்
பூந்தோட்டமாகி விடும்....!
*கவிதை ரசிகன்*
👏👏👏👏👏👏👏👏👏👏👏