கல்லா லல்லா மல்லா
முத்தான மூணு பெண் குழந்தைகள். இவுங்க பிறந்த நேரம் இராசிப்படி பெத்தவங்களைக் கோடிஸ்வரர் ஆக்கப் பிறந்தவங்க.
@@@@@@
ரொம்ப மகிழ்ச்சிங்க சோசியர் ஐயா. இவுங்க மூணு பேருக்கும் பொருத்தமான பேரு வைக்கணுங்களே! நீங்க தான் அந்தப் பேருங்களை தேர்ந்தெடுத்துப் சொல்லணுமுங்க.
@@@@@@@
ஆமாம் தம்பி. மூணு பேரும் ஒரே மாதிரி இருக்கணும். பெயர்களின் முதல் எழுத்து மட்டும் மாறி இருக்கும். பொருள் வேறுபாடு இருக்கும். உன் மனைவிக்கு மூணு பெண் குழந்தைகள் முதல் மகப்பேறிலேயே பிறந்திருக்கிறாங்க என்பதைக் கேள்விப்பட்டதும் உங்கள் குடும்ப சோதிடர் என்கிற முறையில் மூணு தரமான பேருங்களை ஏற்கனவே தேர்ந்தெடுத்து வச்சிருக்கிறேன். சாதகக் குறிப்புக்கு இரண்டாயிரம். பேருங்களுக்கு பத்தாயிரம்.
@@@@@@@@
இந்தாங்க ஐயா. இதில் பதினைந்தாயிரம் இருக்குது. பேருங்களை சாதகக் குறிப்பில் எழுதிட்டு நீங்களே எங்கள் செல்வங்கள் ஓட பேருங்களச் சொல்லிடுங்க ஐயா.
@@@@@@@
தம்பி, இந்த இஷ்டலிங்க சோதிடர் பேரு வச்ச குழந்தைகள் எல்லாம் பில்கேட்ஸ்சுக்கிட்டே வேலைல இருந்து இலட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாங்க. உன்னோட மூணு பெண் குழந்தைகள் பேரையும் சொல்லறேன். இப்ப நல்ல நேரம் தான். கல்லா. லல்லா. மல்லா. உனக்கு அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.
@@@@@@@
ஐயா, ஐயா, கல்லா, லல்லா, மல்லா. இந்த மூணு பேருங்களையும் காதில கேக்கற போதே நாவேல்லாம் தேன் ஊறி இனிக்குதுங்க ஐயா.
@@@@@@@@@
Kalla= Beauty. Indian, English origin.
Lalla = To babble, well spoken.
Malla = Bitter. Hebrew origin.
@@@@@@@@@@@@@@@@@@@@@@€€€€€
தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்