தம்மண்ணா யாருடா

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள ஒரு ஆரம்பப்பள்ளி வகுப்பறை. ஆசிரியர் மாணவ, மாணவியரின் பெயர்களைக் கூப்பிடுகிறார். ஒவ்வொருவரும் எழுந்து நின்று "உள்ளேன் ஐயா" என்று கூறி தாங்கள் வந்திருப்பதை பதிவு செய்கிறார்கள்.

அடுத்து தம்மண்ணா.
@@@@@
ஒரு சிறுமி எழுந்து நிற்கிறாள். "யாருடா தம்மண்ணா? இந்தப் பொண்ணு எதுக்கு எழுந்து நிக்குது. உட்காரும்மா. டேய் பையன்களா தம்மண்ணா யாருடா? எழுந்து நில்லுடா.
@@@@@@@
வகுப்பு மாணவன் ஒருவன் எழுந்து நின்று "ஐயா, இப்ப உட்காரச் சொன்னீங்களே அந்த மாணவி தான் தம்மண்ணா".
@@@@@
என்னடா தம்மண்ணா பையன் பேரா இருக்குது. அந்தப் பொண்ணு தான் 'தம்மண்ணா'னு சொல்லற.
@@@@@@
ஐயா, தம்மண்ணா ஒரு திரைப்பட நடிகையின் பேரு. அந்தப் பேரை இந்த மாணவிக்கு வச்சிருக்கிறாங்க. அரசாங்கம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு தொலைக்காட்சி பெட்டியைக் கொடுத்து வருசம் ஆகுதாம். அதில சொல்லற பேருங்களைத்தான் எங்க கிராமத்தில் உள்ள எல்லாப் பிள்ளைகளுக்கும் வைக்கிறாங்க.
@@@@@@
ஓ... அப்பிடியா. நான் பொழுது போக்காக நல்ல புத்தகங்களைத் தான் வாசிப்பேன். எங்க வீட்டில் தொலைக்காட்சி பெட்டிகூட கிடையாது. சரி. சரி. தம்மண்ணா ஆண்பிள்ளை பெயர் இல்லை. தெரிஞ்சிட்டேன். மலைப்பகுதியில் கூட திரைப்பட நடிகர், நடிகர்களின் இந்திப் பேரு. நல்ல முன்னேற்றம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Tamanna = Desire, wish. Unisex name.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

தமிழ்ப் பெயர்கள் தமிழரின் அடையாளம்

எழுதியவர் : மலர் (3-Jan-24, 6:28 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

மேலே