சிந்தனை செய் நிந்தனையை மறக்க

அப்புவும் குப்புவும் இணை பிரியாத நண்பர்களாக வாழ்ந்து வந்தனர். அப்பு அவ்வப்பொழுது சிரிப்பவன். குப்பு குபீர் குபீர் என்று சிரிப்பவன். அன்றாட வேலைகளை அலுப்புடன் செய்பவன் அப்பு. குப்பு எந்த வேலையாயினும் சலித்துக்கொள்ளாமல் சந்தோஷமாக செய்து முடிப்பவன். ஏன் தான் வாழறோம்னு தெரியலையேன்னு வாழ்பவன் அப்பு. குடுத்த வாழ்க்கையை குதூகலமா வாழ்வோம்னு நினைப்பவன் குப்பு. அப்புவைப் பார்ப்போருக்கு அப்பனும்னு தோணும். குப்புவைப் பார்ப்போருக்கு கும்பிடம்னு தோணும். அடுத்தவங்களைப் பற்றி யோசிப்பவன் அப்பு. கூட இருப்பவர்களைப் பற்றி கண்டு கொள்ளாதவன் குப்பு. உடல் நிலையில் கவனம் செலுத்துபவன் அப்பு. மன நிலையில் கவனம் செலுத்துபவன் குப்பு. தன்னைப் பற்றி மட்டும் நினைப்பவன் அப்பு. பிறரைப் பற்றி நினைப்பவன் குப்பு. பிறர் சொல் கேளாதவன் அப்பு. தான் சொல்வதையும் பிறரைக் கேட்க வைப்பவன் குப்பு. கடந்த காலத்தை நினைத்து வருந்துவான் அப்பு. நிகழ்காலத்தை மட்டும் நினைத்து நிகழ்த்துவான் குப்பு. கோவப்படுவான் அப்பு. பொறுமை காப்பான் குப்பு. கண்ணீரை விதைப்பான் அப்பு. சந்தோஷத்தை தூவுவான் குப்பு. இப்படி பிளஸ் மைனஸ் உடன் இருந்த இவர்களை ஒன்று சேர்த்தது இவர்கள் நட்பு. நல்லதும் கெட்டதும் மாறி மாறி வரும். கடந்து போகக் கூடியவர்களை நினைத்து காலத்தை வீணடிக்காமல் நல்லதே நினைத்து நல்லதே செய்தால் நன்மை நிச்சயம்.

எழுதியவர் : முனைவர் ஆ.கிருஷ்ணவேணி (3-Jan-24, 7:29 pm)
பார்வை : 71

மேலே