குலோத்துங்க சோழன் கோவை - நூல் - இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.
இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

அஃதாவது-தெய்வத்தானாவது தலைவியானாவது கூடுதல்; அவற்றுளிது தலைவியாற் கூடுதலென்க.

அது: வேட்கையுணர்த்தல், மறுத்தல், உடன்படல், கூட்டமென நான்கு வகைப்படும்;

அந்நான்கும்- இரந்த பின்னிற்றற் கெண்ணல் முதலிய பதினைந்தும் பிறவுமாகிய விரிகளையுடையன; அவை வருமாறு

முன்னிலை யாக்கல்.

மெய்தொட்டுப் பயிறல்.

பொய் பாராட்டல் (9, 10)

இடம்பெற்றுத் தழால்.

வழிபாடு மறுத்தல்.

இடையூறு கிளத்தல்.

நீடுநினைந் திரங்கல்.

மறுத்தெதிர் கோடல் (15, 16)

வறிது நகைதோன்றல்.

(இ-ள்) தலைவி முகத்திலே சிறுநகை தோன்றுதல்; வறிது – சிறிது.

கட்டளைக் கலித்துறை

என்னோ திருவுள மிப்பாவை யர்க்கென் றிரங்குமிந்த
மன்னோ யிருளுக் கிளநில வாயது வண்டமிழைச்
சொன்னோரை வாழ்விக்குங் கோழிக் குலோத்துங்க சோழ(ன்)வெற்பிற்
பொன்னோ வெனுநிறத் தார்முகத் தாமரைப் புன்னகையே! 17

இக்கவி உரைப்போருங் கேட்போரும் இன்மையாற் கவிக்கூற்றென்று கொள்க!.

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (10-Jan-24, 10:42 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 21

மேலே