மார்கழித் திங்கள் மழைநிறைந்த இந்நாளில்
மார்கழித் திங்கள் மழைநிறைந்த இந்நாளில்
யார்செல்வார் நீராடி மாதவன் ஆலயம்
என்றே தொடந்தாள் இவள்துயிலை காலையில்
என்செய்வாள் தாயும் இயம்பு
-----இரு விகற்ப இன்னிசை வெண்பா
அடி எதுகை மார் யார் ---ஒருவிகற்பம் என் என் --இன்னொரு விகற்பம்
1 3 ஆம் சீர் மோனை --மா ம , யா மா , எ இ , எ இ
மார்கழிநற் திங்களிலே மழைநிறைந்த இந்நாளில்
யார்செல்வார் நீராடி மாதவனின் ஆலயமே
சோர்வினிலே தொடர்ந்தாளே இவள்துயிலை காலையிலே
கூர்விழிதாய் என்செய்வாள் இயம்புபுத்தூர் நாச்சியாரே
--- முற்றிலும் காய் செறிந்த கலிவிருத்தம்
மார்கழிமெல் லியதிங்கள் மழைநிறைந்த இந்நாளில்
யார்செல்வார் நீராடி மாதவனின் திருக்கோவில்
சோர்வினிலே தொடர்ந்தாளே இவள்துயிலை இளம்பொழுதில்
கூர்விழிதாய் என்செய்வாள் இயம்புபுத்தூர் நாச்சியாரே
--- காய் முன் நிரை பெய்து கலித்தளை மிகுத்து உருவவாக்கிய
தரவு கொச்சகக் கலிப்பா
பொருட் குறிப்பு :---
புத்தூர் நாச்சியாரே----எல்லே இளங்கிளியே இன்னும் உறங்குதியோ
என்று தோழியரை மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாள்
காலை இளம் பொழுதில் துயிலெழுப்பி நீராட அழைத்து
கண்ணன் ஆலயம் இட்டுச் செல்லும் ஸ்ரீவில்லிப்புத்தூர்
ஆண்டாள் நாச்சியார்