கொடிகாத்த குமரன் நினைவு தின கவிதை
*கொடிகாத்த குமரன் நினைவு தினம்* இன்று.... நம் தேசத்திற்காக *உயிரையே கொடுத்த* அவரை *ஒருமுறையாவது நினைத்துக்* கொள்ள இதை *ஒரு நிமிடம் வாசியுங்கள்* தவறாமல்........
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
*திருப்பூர் குமரன்*
*நினைவு தினம்*
படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
ஈரோடு மாவட்டம்
சென்னிமலையில்
1904 ஜனவரி 11 இல்
ஒரு " சாமி "எழுந்தருளியது....
நாச்சிமுத்து
கருப்பாயி
அதன் பெற்றோராகி
" குமாரசாமி " என்று
பெயர் சூட்டினார்......
குமாரசாமியின்
தொடக்கக் கல்வியே
இறுதிக் கல்வியானது....
ஆம்.....!!
வறுமை
பள்ளிக்குச் செல்ல
தடை போட்டதால்.....
குமாரசாமி "வாழ்க்கை"
தறியால்
நெய்யப்பட்டது....
நெய்த ஆடை
அங்கத்தை மறைக்கவே
பற்றவில்லை
அதைக் கொண்டு
"வயிற்றை கழுவுவது" எங்கே ?
தனது
குடும்பத்தை பிடுங்கி
பள்ளிபாளையம்
மாமன் வீட்டில் நட்டார்....
அங்கும்
அவர் வாழ்க்கைக்கு
நெசவுத்தொழிலே
நீராக ஊற்றப்பட்டது.....
"வருமானம்
தன்மானத்தைக்
காப்பாற்ற" கூட
வழி செய்யாததால்....
திருப்பூருக்கு
தன் வாழ்க்கையை
திரும்பவும்
பிடிங்கிக்கொண்டு போனார்...
திருப்பூரில்
பஞ்சு எடை போடும் தொழில்
செய்து வந்தார்.....
இப்போதும் கூட
காலம் குமரனை
எடை போடத்தான்
அந்த தொழிலை
கொடுத்ததோ என்று
ஐயமாகத்தான் இருக்கிறது......
ஓய்வு நேரத்தை
காந்தியின்
சுதந்திரப் போராட்டத்தில்
செலவழித்தாய்.....
"தேசபந்து சங்கத்தில் "
உன்னை
ஒரு அங்கமாக்கிக் கொண்டாய்....
கருப்பாயி தாயாகி வந்தாள்
ராமாயி தாரமாகி வந்தாள்
யாரும் உனக்கு
வாரிசாகி வராமல்
போய்விட்டனர்.......
தாய் நாட்டிற்கே!
நீ "குமாரனாக"போக
இருப்பதால்
அவருக்கு 'ஒரு குமரன் "
தேவையில்லை என்று
காலம்
நினைத்ததோ என்னவோ....?
ஆங்கில அசுரர்கள்
காங்கிரஸ் கமிட்டியை
சூறையாடி
காங்கிரஸ் கட்டிடங்களுக்கு
பூட்டு போட்டு
பூரிப்பு கொண்டனர்....
அசுரர்களை எதிர்த்து
தேசபந்த் சங்கத்தினர்
போராட்டம் நடத்தினர்
குமாரசாமி தலைமையில்....
மதம் பிடித்த யானைகள்
மனித கூட்டத்தை
தாக்கியது போல்
போலீஸ் அசுரர்கள்
தேசபந்து சங்கத்தினரை
தாக்கினர்.......
ஒவ்வொரு அடியும்
உறுப்பினர்களின் உறுப்புகளில்
இடியாக இறங்கியது......
இரத்தவெள்ளத்தில்
பிறக்கும் குழந்தை போல்
ஆங்காங்கு
சிலர் மயங்கி கிடந்தனார்.....
குமரன் உடம்பில்
ஒடியும்
எலும்புகளின் சத்தத்தில் கூட
"பாரத மாதாவுக்கு ஜே!"என்பதையே
கேட்க முடிந்தது.....!!!
இப்போதும் தேசியக்கொடி
கம்பீரமாகப் பறக்கிறது
குமரனின் கையில்.....
லத்திக்கு
மூச்சு விடக் கூட நேரம்
கொடுக்காமல் அடித்ததில்...
குமரனின் ஆன்மா
மூச்சு விட முடியாமல் துடித்தது....
இப்போதும் தேசியக்கொடி
கம்பீரமாகப் பறந்தது
குமரனின் கையில்......
குமரின்
தசைகள் கிழிக்கப்பட்டு
கழுத்தறுத்த
விலங்கிலிருந்து வெளியேறும்
இரத்தமாக
பூமியை நனைத்தது.....
இப்போதும் தேசியக்கொடி கம்பீரமாகப் பறந்தது
குமரனின் கைகள்.......
முரட்டுத்தனமாக
விழுந்த அடியில்
இமயமலை
இரண்டாகப் பிளந்து
சாய்வது போல்
குமரனின் மண்டை பிளந்து
மண்ணில் சாய்ந்தான்...
இப்போதுதான் முதன்முதலாக
குமரன் "வலியை" உணர்ந்தான்... "தேசியக்கொடி
மண்ணில் விழுகிறதே!" என்றே...
பாரதத் தாயின் மடியில்
ஒரு குழந்தையாக
கிடந்த குமரனை
பூட்ஸ் காலால் உதைக்கின்றனர்
உடல் மீது ஏறி மிதிக்கின்றனர்...
உடலை விட்டு
கொஞ்சம் கொஞ்சமாக
போய்க்கொண்டிருக்கிறது
குமரனின் உயிர்...
கொஞ்சம் கூட
போகாமல் இருக்கிறது
குமரனின் கையைவிட்டு
தேசியக்கொடி .........
போலீஸ்
குமரன் கையில் இருந்தது
தேசியக்கொடி
கஷ்டப்பட்டு மிகவும்
கஷ்டப்பட்டு பிடுங்கி
தூரமாக எறிகிறான்...
அவனுக்கு தெரிந்திருக்க
வாய்ப்பில்லை....
அது "கொடியல்ல"
"குமரனின் உயிர்" என்று....
வெள்ளையர்கள்
உன்னை
புதைத்த இடத்தை
மறைத்து விட்டதாக
நினைத்தார்கள்......
உன் புகழும்
உன் வரலாறும்
விருட்சமாக வளர்ந்தோங்கியது...
வீரியம் மிக்க விதையை
மண்ணில் புதைத்து
மறைக்க முடியுமா......?
ஒவ்வொரு
தேசியக்கொடியையும்
தாங்கிப்பிடிக்கும் "கம்பமும்"
எங்கள் கண்களுக்கு
கொடிகாத்த குமரனே !
"நீயாக"த்தான் தெரிகிறாய்
நிஜமாக தரிசனம் தருகிறாய்
தேசியக்கொடி உள்ளவரை
உன் தியாகம் போற்றப்படும்....!!
நம் தேசம் உள்ளவரை
உன் புகழ் பரப்பப்படும்.......!!
*கவிதை ரசிகன் குமரேசன்*
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

