தேசத் துரோகிகள்
நேரிசை ஆசிரியப்பா
இலையு திர்ந்து பின்முளைத் திடவதை
வளர்ச்சி யென்பார் முன்னோர் மாறின்
பட்டுச் சாமென் பார்பார் நம்முடை
சுதந்தி ரத்திற் குப்பின் நாட்டுடை
தியாகஞ் செய்யமைச் ரரெல்லாம் வளர்ச்சி
திட்டம் தீட்டியே வளர்த்தார் செழிப்பை.
திட்ட மிட்டு நுழைந்த அண்ணா
வின்தம்பி வருமானம் மொத்தமும் சுருட்டி
விஸ்கி ஜின்பிராந்தி வரியில் சம்பள
விநியோகம் செய்து வீதி வீதிக்கு
அண்ணா பெரியார் பேரை வைத்தார்
வளர்ந்த முன்திட்டம் கெட்டுப் போச்சு
மொட்டை யாக வெட்டி வெட்டி
பட்டுப் போக விட்டார் தம்பி
சரித்திரம் மறைத்து ஆளா ளுக்கு
கல்லூரி நடத்தி கொள்ளை கொள்ளையாய்
பணத்தை சேர்த்து தேர்தலில் செலவிட
பதுக்கி வைத்தார் பாவியர்
எதற்கும் அஞ்சாத துரோகிய ரிவரே
........