இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

பொங்கல் என்றவுடன்
எல்லோர் நெஞ்சங்களிலும்
மகிழ்ச்சி வெள்ளம் பொங்குது

புது பானைக்குப் பொட்டு வைத்து
மஞ்சள் கிழங்கைக் கட்டி
அதிலே புத்தரிசியிட்டு
பருப்பு, நெய், வெல்லம் சேர்த்து
பொங்கல் வைத்து
உற்றார் உறவினர்களுடன்
இணைந்து உண்டு சுவைத்து
மகிழ்ச்சிக் கொள்கிறோம்

இந்த பொங்கல் நன்னாளில்
ஏரோட்டம் இல்லையென்றால்
தேரோட்டம் இல்லை என்பதை
நம் நெஞ்சங்களில் நினைந்து

வயலில் ஏர் பிடித்து உழைக்கும்
உழவனையும் அவனுக்கு
உறுதுணையாக இருக்கும்
காளை மாடுகளையும்
நாட்டின் விவசாய வளர்ச்சிக்கு
ஆராய்ச்சிகள் பல செய்திடும்
விவசாய விஞ்ஞானிகளையும்
தப்பாமல் வணங்கி மகிழ்வோம்

உழவர்களின் வாழ்வாதாரம்
தரணியில் மங்காமல் இருக்க
சபதம் கொள்வோம்...!!
இளைய தலைமுறைக்கு
பாரம்பரிய பண்டிகைகளின்
சிறப்புக்களை எடுத்துரைப்போம்

உலக மக்கள் அனைவருக்கும்
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (14-Jan-24, 7:55 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 473

மேலே