உழவர் திருநாள் 🐄🐄🐄
போகித் திருநாள்
தித்திக்கும் பொங்கல் திருநாள்
அழகான கண்ணனுக்கு ஒரு நாள் அசைபோடும் மாட்டுக்கு திருநாள் அழகான பயிரை தரும் ஆகாய தலைவனுக்கு பெருநாள்
அதிகாலை உதயமாகும் கதிரவனின் திருநாள்
அழகான பொங்கல் திருநாள்
அச்சு வெல்லம் பச்சரிசி சுவை நாள்
புதுப்பானை பொங்கும் திருநாள் உழவனின் பெருநாள்
உழைக்கும் கரங்களின் திருநாள் தமிழரின் திருநாள்
தரணியெங்கும் பெருநாள்
இனிக்கும் கரும்பு சுவையினால் மஞ்சளின் மணநாள்
மங்கலம் பொங்கும் திருநாள்
உறவுகள் கூடும் திருநாள்
பொங்கும் பொங்கல் திருநாள்
தை மகளின் பெருநாள்
தமிழ் மகளின் திருநாள்