காதல் காற்று வீசும் நேரம்
காதல் காற்று வீசும் நேரம் !!
——-
மோதல் எல்லாம்
தீர்ந்தே போகும் /
காதல் காற்று
வீசும் நேரம் /
பற்றும் கைகள்
பாசம் சொல்லும் /
முற்றும் அன்பின்
முடிவை வெல்லும் /
சிவந்த விரல்கள்
சிலிர்க்கும் தீண்டல் /
உவப்பில் துள்ளி
உள்ளம் சீண்டும் /
ஆணும் பெண்ணும்
அடையும் சொந்தம் /
பேணும் ஆயிரம்
பெருமைகள் பேசும் /
உறவுகள் ஒன்றாய்
உதவிடப் புதிதாய் /
திறந்திடும் இல்லம்
திளைத்திட இன்பம் /
புயலும் வாழ்விலே
புகுந்திடும் சிலநாள் /
அயலும் பிறவும்
அணைத்திடும் மறுநாள் /
தென்றல் மட்டுமே
தினமும் இல்லை /
மன்றத்தில் வாடை
வருவதும் வழக்கமே /
ஒருவரின் மனதை
மற்றவர் புரிந்து /
இருமனம் ஒன்றாய்
இணைவதே சிறப்பாம் /
-யாதுமறியான்.