மூவர்ண கொடி பறக்குது

மூவர்ணக் கொடி

மூவர்ண கொடி நமது உயர்வை பறைசாற்றி பறக்குது வானிலே
முப்படை வீரர்கள் நம் நாட்டை காப்பார் என்ற பெருமையுடனே
மூத்த தலைவர்கள் சுதந்திரம் அடைய செய்த தியாகத்தை எண்ணி
முன்னுள்ள என்னாட்டுக்கும் நான் குறைந்ததில்லை எனக் கூறி
மூவேந்தர்கள் பேணிக்காத்த பொன்னாட்டைக் கண்டு களிக்க
வருகை தந்த பல தலைவர்கள் தனக்கு மரியாதையை செலுத்த
வான வீதியில் விமானங்கள் வர்ண ஜாலங்கள் பல செய்ய
வாழ்ந்திடும் மக்கள் அலையாக வந்து நன்றியை தெரிவிக்க
எங்கும் பட்டொளி வீசிக் கொண்டு எனைவெல்ல யாருண்டு என
எதற்கும் தளராமல் மூவர்ணங்கள் அளிக்கும் செய்தியை பரப்பி
வந்தேமாதரம் வாழ்க பாரதம் என கூவிடும் மக்கள் மதிக்க
கொடி பறக்குது பார் வானில் பட்டொளி வீசிக்கொண்டு
கொடியை மதிப்போம் நாட்டை காப்போம் வரலாறு படைப்போம்

எழுதியவர் : கே என் ராம் (28-Jan-24, 10:43 am)
சேர்த்தது : கே என் ராம்
பார்வை : 20

மேலே