உன்னை சேர்ந்திடும் அந்த விடியலுக்காக 555

***உன்னை சேர்ந்திடும் அந்த விடியலுக்காக 555 ***


ப்ரியமானவளே...


விண்மீன்கள் ஒன்றுகூடி
ஓவியம் வரைந்தது போல...

என் கண்ணெதிரில்
நீ தோன்றினாய்...

கண்டது
ம் காதலென
என் நெஞ்சுக்குள் வந்தாய்...

தினம் பார்த்து பேசி
அனைத்துக்கொள்வது மட்டுமல்ல காதல்...

நினைத்து வாழ்வதும்
சுகம் தானே காதல்...

சில மணித்துளிகளே
நாம் பேசி சிரி
த்தாலும்...

மீண்டும்
நாம் சந்திக்கும்வரை...

அந்த நினைவுகள் மனதுக்குள்
அலையடிக்குமடி தினம் தினம்...

தொலை தூரத்திலும்
உன்னை ரசிக்கிறேன்...

வான் நிலவாக உன்னை
நான் பார்ப்பதா
ல்...

உன்னருகில் வந்து
உன்னை அனைத்து...

முத்த மழையில் உன்னை
நனையவைக்க ஆசையடி...

நெருங்கவிடுவதில்லை
நேரம் உன்னையும் என்னையும்...

தென்றலில் நறுமணம்
சேர்ந்து
வருவதுபோல...

என் சுவாசம்
உன் நினைவில் வாழுதடி...

உன்னை சந்திக்காமல்
தான்
இருக்கிறேன்...

நான் உன்னை
நினைக்காமல் இல்லை...

விழித்திருக்கிறேன் இரவெல்லா
ம்
உன்னை சேர்ந்திடும் அந்த விடியலுக்காக.....


****
முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (31-May-24, 8:51 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 181

சிறந்த கவிதைகள்

மேலே