நேரம் கடத்த வேண்டும்

நேரம் கடத்த வேண்டும்
பேசி பழக
யாருமில்லை
அக்கம் பக்கம்
ஆயிரம் பேர் இருந்தாலும்

எப்பொழுதும் பரபரப்பு
கண் எதிரே
கண்டாலும் ஒதுக்கபட்டவன்
போல் பார்வை

குட்டி குழந்தைகள்
ஒட்டி வந்து
கதை பேச நினைக்கும்
காலமும் இல்லை

கையடக்க கருவியுடன்
தானாக பேசி கொள்கிறது

வாழ்க்கையின் அனுபவங்கள்
உள்ளத்துள் துருப்பிடித்து
தொண்டக்குள் அடைத்தே
கிடக்கின்றன

உலகம் என்னவோ
அன்றைய
என் காலத்தை
போல வேகமாகத்தான்
ஓடி கொண்டிருக்கிறது

வயதின் முப்பு
வந்து
ஓடி சென்ற
காலத்தை நத்தையாய்
நகரவைத்து வேடிக்கை
பார்க்கிறது.

எத்தனை நாளோ
இப்படி காலத்தை
கடத்த போகிறேன்?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (31-May-24, 11:07 am)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 68

மேலே