ரோஜா தினக் கவிதை
,🌹#ரோஜா_தினம்_இன்று🌹
படைப்பு கவிதை ரசிகன் குமரேசன்
#ரோஜா ..
மலர் தேசத்தில்
இதுவே ராணி....
முள்ளும் மலரும்
இணைந்து எழுதிய
காதல் கவிதை... ..!
காதல் நாட்டில்
இதுவே
தேசிய சின்னம்.....!
குழந்தைகள் மனதில்
இடம் பிடித்த
நேரு மாமாவின்
சட்டையிலேயே
இடம் பிடித்தது தான்
இதனுடைய
வாழ்நாள் சாதனை....!
காதலை
வெளிப்படுத்தும்போது
பலர்
தூக்கி எறிந்த
ரோஜாக்களின்
'கண்ணீர்த்துளிகளைத்' தான்....
கண்ணாடிப்புட்டியில்
'ரோஜாப்பன்னீர்' என்று
விற்பனைச்
செய்கின்றார்களோ....?
ஒவ்வொரு ஆண்டும்
காதலர் தினம்
இதன் தலைமையில்தான்
சிறப்பாக
நடைபெறுகிறது...!
காதலர் தினத்தன்று
கன்னிப் பெண்களின்
கூந்தல் ஓரம் இருக்கும் ரோஜா...
காதலனாகவே
பலருக்குக் காட்சியளிக்கும்...!!!
இதில்
'அழகு நிலையம்' இருப்பது
எத்தனையோ
பேருக்குத் தெரியும்.....
ஆனால்
'சித்த
மருத்துவச்சாலையும்' இருப்பது
எத்தனை
பேருக்குத் தெரியும்.....?
அழகிற்கு
இதுதான் தலைநகரம்....!
அன்பிற்கு
இதுதான் சிகரம்.....!
இதனுடன் பிறந்த
உடன் பிறப்புகளின்
எண்ணிக்கை
நூற்றுக்கு மேல்....
இவர்களை
வளர்ப்பவர்கள்
உலகம் முழுவதும்
உள்ளார்கள்.....
இதற்கு ரோஸா என்று
பெயர் வைத்தது
இலத்தின் மொழிதான்...
இதன் அர்த்தம்" அன்பு".....
அதனால்தான்.....
காதலர்கள்
காதலை
வெளிப்படுத்தும் போது
இதைக் கொடுத்து வெளிப்படுத்துகின்றார்களோ?
🌹அனைவருக்கும் ,,,🌹🌹ரோஜா தின
நல்வாழ்த்துகள்.. !!!🌹🌹
இவன்
கவிதை ரசிகன் குமரேசன்