குலோத்துங்க சோழன் கோவை - நூல் - மூன்றாவது - வன்புறை

அருணாசலக் கவிராயர் எழுதிய குலோத்துங்க சோழன் கோவை
நூல்.

இரண்டாவது - இயற்கைப் புணர்ச்சி.

மூன்றாவது - வன்புறை.

அஃதாவது-தலைவி ஐயுற்றவழி ஐயந்தீரத் தலைவன் வற்புறுத்திக் கூறல்;

அஃது-ஐயந்தீர்த்தல், பிரிவறிவுறுத்தலென இருவகைப்படும்;

அவை: அணிந்துழி நாணியது உணர்ந்து தெளிவித்தல் முதல் இடமணித்தென்றல் ஈறாகிய ஆறுவிரிகளையுடையன;

அவை வருமாறு:-

அணிந்துழி நாணீயது உணர்ந்து தெளிவித்தல்.

(இ-ள்) புணர்ச்சியிடத்துத் தலைவி புனைந்த முத்தாரம் முதலிய கொங்கையணி, குழலணிகள் வேறுபட்டவற்றைத் தலைவன் றன் கையினால் வேறுபாடு தீரப் புனைந்துழித் தலைவி பாங்கியால் அணியப்பட்ட அணிக்கு இவர் கையாலணியும் அணி வேறுபடுமென்றும் அதைப் பாங்கி யறியில் ஐயம் பிறக்குமென்றும் நாணுற்று வெட்கப்பட்டாளாக அதைத் தலைவனறிந்து தலைவியைத் தெளிவித்தல்

கட்டளைக் கலித்துறை

செய்யுந் தருமத் துறையூர்க் குலோத்துங்க சென்னிவெற்பி
னையுந் தொழிலொழி நன்னுத லேநடு வாதியந்தம்
பெய்யு மணிகலன் முன்போ லணிந்தனன் பேரிகுளை
கையுமென் கையு மொருவர்தம் பாலணி கற்றனவே! 23

எழுதியவர் : அருணாசலக் கவிராயர் (28-Jan-24, 10:38 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே