பைததியக்காரன்

நண்பர் ஒருவர் *பைத்தியக்காரனுக்கு* கவிதை எழுத முடியுமா? என்று கேட்டார்... எழுதியிருக்கிறேன் *அதை தங்கள் பார்வைக்கு சமர்ப்பித்திருக்கிறேன்..*





👤👤👤👤👤👤👤👤👤👤👤

*பைத்தியக்காரன்*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

👤👤👤👤👤👤👤👤👤👤👤👤

இவன்
ஆடைகளை
கிழித்து கொள்கிறான் அதற்குள் இருக்கும்
தன்னைப் படிப்பதற்கு....

இவன்தான்
இந்த பூமியில்
மனிதனாக வாழ்கிறான்...

ஆம்.....
இவனிடம்
பொறாமை இல்லை
பணத்திற்காக
பாவம் செய்வதில்லை
புகழுக்கு ஏங்குவதில்லை
எதற்கும் அடிமையாவதில்லை
பதவிக்கு
கூஜா தூக்குவதில்லை
"என்றுமே! உண்மை
பைத்தியமாக தான் தெரியும்..."

இவன் ஒரு துறவி
மனைவி மக்களை
துறந்தவன் அல்ல
இவனையே துறந்தவன்... !

இவன் ஒரு தத்துவ ஞானி
யாருக்கும்
தத்துவங்களை
சொல்வதில்லை
இவனே !
தத்துவமாக இருக்கிறான்....

நிகழ்காலம்
இறந்த காலம்
எதிர்காலம்
முக்காலத்தையும் கடந்தவன்....

நாம்
தேசமெங்கும் தேடிலையும்
நிம்மதி அமைதி
இவனுக்குள் தான்
"ஒளிந்து கொண்டிருக்கிறது...."

இவன் முற்றும்
துறந்த முனிவர்....
தாடி தலைமுடியால் மட்டுமல்ல
மனம்
"கனத்து மௌனத்தை"
கொண்டிருப்பதால்....

ஆடை
அழுக்காக இருக்கலாம்
கிழிந்தும் இருக்கலாம் ...
"ஆன்மா" என்னவோ
மழை நீரைப் போல்
தூய்மையாகவே இருக்கிறது....

இவன் ஒரு ஆன்மீகவாதி
கோவிலுக்கு
செல்ல மாட்டான்
ஏனெனில் ?
தெய்வமே !
அவனுக்குள் தான்
இருக்கிறது......!!!

இவன்
ஒருவன் தான்
இந்த உலகில்
இரண்டு முறை
இறக்கிறன்.....!

பாதயாத்திரை
போய்க் கொண்டிருக்கிறான்
கல்லறை கோவிலுக்கு...!



*கவிதை ரசிகன்*

👤👤👤👤👤👤👤👤👤👤👤

எழுதியவர் : கவிதை ரசிகன் (9-May-24, 9:01 pm)
பார்வை : 26

சிறந்த கவிதைகள்

மேலே