ரவீந்திரரின் சாந்திநிகேதன்

ரவீந்திரரின் சாந்திநிகேதன்

அவரது ஆன்மா அலைகிறது
அமைதியற்று கவலையுடன்,
அப்புலவர் நினைவுகூறுகிறார்
திரும்பி வரமுடியாத அந்த
அழகிய நாட்களை நினைத்து

சாந்திநிகேதனின் நிலங்குளடன்
காதல் கொண்டு
அச்செந்தூரப்பூக்கள்
உடலுறவுகொண்டு அவ்வளமுற்ற மண்ணினை
சிவப்பாக மாற்றி விட்டனவே

காதம்பரியின் சலங்கை ஒலியில்
கொபாய் நதியின் வற்றிய படுகைகள்
காமத்தில் விறைத்தெழுந்து
அளவில்லா நீரூற்றுகளை பீச்சியடிக்க
மீன்கள் கும்மாளத்துடன் நடனமாடுகின்றனவே

வசந்த்தத்தின் அவ்வழகிய நிறங்களுடன்
எளிய முறையில் பேசி
கவிதைகள் வாசித்து
முடிவற்ற நேசத்துடன் சிரித்து மகிழ்ந்து
வாழ்க்கைத் தரம் உயர்ந்தனவே

நிலம் இன்றும் சிவப்பாக உள்ளது
பூக்களின் காதலினால் அல்ல
இவை உதிர்ந்து உறைந்த உதிரத்தினாலே
கவியின் அமைதியுற்ற இடம்
மாறிவிட்டது முற்றிலும் முற்றிலும்

சம்பத் குமார்

எழுதியவர் : கல்கத்தா சம்பத் குமார் (9-May-24, 2:49 pm)
சேர்த்தது : sampath kolkata
பார்வை : 30

மேலே