நான்..நீ...!
#நான்....நீ !*
படைப்பு *கவிதை ரசிகன்*
#குமரேசன்
இனியவளே !
நிலவாய் நீ இருந்தால்
வானமாய் நான் வருவேன்....
தென்றலாய் நீ இருந்தால்
சுகமாய் நான் சேர்வேன்....
தேனாய் நீ இருந்தால்
சுவையாய் நான் கலப்பேன்...
தேராய் நீ இருந்தால்
வடமாய் நான் இணைவேன்...
கனியாய் நீ இருந்தால்
சாராய் நான் ஊறுவேன்....
கிளியாய் நீ இருந்தால்
சிறகாய் நான் முளைப்பேன்....
மழையாய் நீ இருந்தால்
சாரலாய் நான் அடிப்பேன்...
தீபமாய் நீ இருந்தால்
வெளிச்சமாய் நான் பிறப்பேன்....
சிலையாய் நீ இருந்தால்
கோவிலாய் நான் எழுவேன்....
புல்லாங்குழலாய் நீ இருந்தால்
காற்றாய் நான் நுலைவேன்.....
புல்வெளியாய் நீ இருந்தால்
பனித்துளியாய் நான் உருவாகுவேன்..
பெண்ணாய் நீ இருந்தால்
ஆணாய் நான் வருவேன்..
மனைவியாய் நீ இருந்தால் கணவனாய் நான் இருப்பேன்
கல்லரையாய் நீ இருந்தால்
அதில் கல்லாய் நான் மாறுவேன்...
*கவிதை ரசிகன்*
🩷❤️🧡💛💚🩵💙🖤🩶🤍🤎