வசந்த வாழ்வு
கடல் அலை கால் தொட
விரல் இடை மணல் தொட
காற்றோடு கை விரித்து
கால்நடை போட Software
சேற்றோடு கால் சொருகும்
செவ்வான கிழக்கின்கால்
செங்கதிர் தீண்டும் பனிபோலே
நானும் நாற்றோடு பேசி
காற்றோடு போக வேண்டும்
ஆற்றங்கரை மீன்பிடித்து
ஓடிவந்து நான் கொடுக்க
அம்மா கைப்பக்குவத்தில்
ஐந்தாறு மீன் அதிதாமாய்
திண்ணி ஆனந்தம் கொள்ள வேண்டும்
பள்ளம் மேடு கொள்ளும் காடு
முள்ளில் வேலி குயிலின் கூடு
மாதவிடாய் பூவில்
மதுரம் தேடும் தேனீ
ஆடும் மயிலாய் நானும் மாறி
கானகம் எங்கும் ஆட வேண்டும்...