தித்திக்கும் தீ நீயே

தித்திக்கும் தீ
நீயே கண்ணே//
கண்ணே எந்தன்
காதலின் உயிரே//
உயிரோடு இணைந்தே
உறவாடும் பெண்ணே //
பெண்ணே உந்தனில்
பேராசை கொண்டேனே//
கொண்டிடும் மனசைக்
கொடுத்தேனே உன்னிடம் //
உன்னோடு என்றுமே
உறங்கிட நினைப்பேனே //
நினைப்பேன் காலமெல்லாம்
நிழலாவேன் தேவியே //
தேவியே தித்திக்கும்
தீ நீயே //
கவிதாசன்

எழுதியவர் : கவிதாசன் (15-Mar-24, 2:02 am)
சேர்த்தது : kavithasan
பார்வை : 88

மேலே