ஹைக்கூ கவிதை

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

*குறுங்கவிதை*

படைப்பு : *கவிதை ரசிகன்*

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

காலி குடங்களை வைத்து

பிடிக்கின்றனர்

தண்ணீர் வண்டியை

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

விரட்டி அடித்ததால்

திருடக் கற்றுக்கொண்டது

காக்கை

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

அந்தப் புடவையெங்கும்

பட்டுப்பூச்சியின்

கல்லறைகள்

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

சாமியார்களின் காலடிப்பட்டு

புனிதமடைகின்றது

நீதி மன்றங்கள்

⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕⭕

தேன்கூடழித்தக் கைகளில்

வடிந்துக்கொண்டிருக்கிறது

வியர்வை

*கவிதை ரசிகன்*

☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

எழுதியவர் : கவிதை ரசிகன் (17-Mar-24, 8:56 pm)
பார்வை : 28

மேலே