ஓடிப்போன கணவன்

சோசியர் ஐயா, என்ற பேத்தி சாதகம் இது.

கொஞ்சம் நல்லா பாத்து சொல்லுங்க.

ஓடிப்போன அவளோட கணவன் திரும்பி

வருவானா?
@@@@@@
உங்க பேத்திக்கு நீங்க வச்ச பேரே

ராசியில்லாத பேரு. வாணி பெண்களுக்கு

வைக்கிற பேருதான். அதில்

சந்தேகமில்லை. ஆனால்

வடமாநிலங்களில் சிலர் 'வாணி'க்கு

முன்னாடி இரண்டு பேருங்களை வச்சு

வாணிகூட வேறு ஒரு பேரையும்

வச்சுக்குவாங்க. சரி இந்தப் பேரை உங்க

பேத்திக்கு வச்சது யாரு?
@@@@@@@

என்ற மகன் 'நாக்குராசு'தானுங்க.

@@@@@@@

நாக்கு ராசா? இதென்ன பேரும்மா?

@@@@@@

நாங்க 'நாகராசன்'னு தான் பேரு வச்சோம்.

அவன் அந்தப் பேரை 'நாக்ராசு' (Nagraj)னு

மாத்திட்டானுங்க.

@@@@@@@

சரி பேத்திக்கு அந்தப் பேரை உங்க மகன்

நாக்ராஜ் எங்க கண்டுபிடிச்சாரு?

@@@@@@@

ஆங்கிலத்தில் ஒரு கட்டுரையைப்

படிச்சானாம். அதை எழுதிய பெண்ணோட

பேருள மூணு சொற்கள் இருக்குமாம்.

கடைசிப் பேரு 'மொத்வாணி'யாம்.

"தமிழர்கள் யாருமே அவுங்க

பிள்ளைகளுக்கு வைக்காத பேரு

மொத்வாணி. அதுதான் என் குழந்தையின்

பேரு"னு சொல்லி பேரை பதிவு

பண்ணிட்டான். மொத்வாணி படிக்கிற

காலத்தில் கூடப்படிக்கிற பிள்ளைகளை

அடிச்சு மொத்துவாளாம். அதனால அடிக்கடி

என்ற மகன் பள்ளிக்கும் கல்லூரிக்கும்

போயி மன்னிப்புக் கேட்பான். சரி

திருமணம் செஞ்சு வச்சா மொத்வாணி

திருந்துவானு எதிர்பார்த்தோம். திருமணம்

ஆன ஒரே வாரத்தில் அவள் கணவன்

'அதிசசு'கூட கருத்து வேறுபாடு ஏற்பட்டு

அவனை கண்டபடி மொத்தி விட்டுட்டா.

அவளோட மொத்து தாங்க முடியாமல் அந்த

அதிசசு ஓடிப்போயிட்டான்.‌ அவனைச்

சமாதானப்படுத்த முடியல. என்ன

செய்யறதுங்க சோசியர் ஐயா?

@@@@@@@

பாட்டி, அந்த மொத்வாணியைத் தூக்கிட்டு

உங்க பேத்திக்கு 'அன்பரசி'ங்கிற பேரை

வச்சிடுங்க. அன்பரசியே தன் மாமியாரின்

வீட்டுக்குப் போயி அவள் கணவன்

'அதிசசு'கிட்ட மன்னிப்புக் கேட்டு அவனை

உங்க வீட்டுக்கு அழைச்சிட்டு வருவாள்.

பெயர் மாற்றம் செய்த ஒரு வாரத்தில இது

நடக்கும். சரி போயிட்டு வாங்கம்மா.

@@@@@@

ரொம்ப நன்றிங்க சோசியல் ஐயா.

எழுதியவர் : மலர் (24-Mar-24, 9:22 am)
சேர்த்தது : மலர்91
Tanglish : odipona kanavan
பார்வை : 100

மேலே