அடுத்த பிறவியில் தணியும் அவன் தாகம்

ஒன்றாம் வகுப்பு படிக்கையில் அவனுக்கு ஒன்றும் தெரியாது
பதினொன்றாம் வகுப்பு படிக்கையில் தெரியாதது ஒன்றுமில்லை!

ஆறு வயதில் பள்ளிக்கூடம் செல்லத்தொடங்கியவன்
அறுபது வயதிலும் வேறு பள்ளிப்பாடம் கற்க ஏங்குகிறான்!

பள்ளி முடிந்து கல்லூரி சேர்ந்ததும் வாலிபம் மேலும் தலைதூக்கியது
விளைவு ஒன்றிரண்டல்ல நங்கையர் பலரை அவன் கண் தாக்கியது!

ஏழுவருட வேலை அனுபவத்தில் சேலை கிடைக்காது அவதிப்பட்டான்
எட்டாவது வருடம் ஒரு அழகிய சேலையின் சோலையில் களிப்புற்றான்!

மணமாகும்வரை இளமாதர்களின் அழகுகளை கண்டு ரசித்தான்
ஆனபின் உடல்வாகு பெண்களுடன் கற்பனை காமம் புரிந்தான்!

பூவை விட்டு பூ தாவும் வண்டைப்போல் தேன் நுகர நினைத்தான்
பூக்கள் பல பார்வைக்கு மட்டுமே எனும் விதி கண்டு குமுறினான்!

அனுபவிக்க யாருக்குத்தான் ஆசையும் மோகமும் இன்றிப் போகும்?
இந்த பிறவி இல்லையேல் அடுத்த பிறவியில் தணியும் அவன் தாகம்!

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (5-Apr-24, 5:14 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 71

மேலே