நன்மதி வெண்பா - நூல் - பாடல் 35
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
காரணமில் லாநகையுங் காதலன்பா லன்பில்லா
நேரிழையும் பூரணமில் நெய்படுநற் - பூரிகளும்
பல்லியமில் லாமணமும் பாரினில்வீ ணாமெனவே
தொல்லியல்பார் நன்மதியே சொல்! 35