யாதுமாகிய தமிழ்

யாதுமாகிய தமிழ்
+++++++++++++++++
எழுத்தாகி சொல்லாகி
ஏட்டில் பதிப்பாகி/
எழுச்சியால் உலகெங்கும்
எதிரோலிக்கும் தாய்மொழியே/

வள்ளுவன் குறளாகி
வையத்துள் அறமாகி/
அள்ளியேப் புகட்டிடும்
அறத்துப்பால் அமுதே/

சுதந்திரக் கவிச்சுடராகி
சுதேசியாக நீந்தியவளே/
பிதாவாகி அறிவூட்டி
பிரபலமாக்கும் செம்மொழியே/

உணர்வாகி உயிராகி
உயிரெழுத்து வரியாகி/
கோணக்காத்துப் பாட்டாகும்
கோபுரக் கலசமவளே/

கல்வெட்டில் கதையெழுதி
கற்பிக்கும் வரலாறே/
யாழயின் மொழியாளென
யாதுமாகியே தமிழே/

சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (8-Apr-24, 8:10 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 227

மேலே