சாருவரி ஆண்டு பலன் - இடைக்காட்டு சித்தர்

நேரிசை வெண்பா

சாருவரி ஆண்டதனிற் சாதிபதி னெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள்! - மாரியில்லை
பூமிவிளை வில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமன்றிச் சாவார் இயம்பு!

ஒன்று மூன்று சீர்களில் இயைந்த மோனை வருவது பொழிப்பு மோனையாகும்.

நான்கடிகளிலும் பொழிப்பு மோனை சிறப்பாக அமைந்த வெண்பா இடைக்காடரின் புலமைக்கு எடுத்துக் காட்டு!

எழுதியவர் : இடைக்காட்டு சித்தர் (12-Apr-24, 10:09 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 33

மேலே