ஒன்றியம் காத்திட ஒண்றினைவோம்
ஒன்றியம் காத்திட ஒண்றினைவோம்
மொழியால் பிரிவினும்
மொழிவோம் பிணைந்திட/
தொழிலால் குலம்காணா
தோழமையாக குழுவோமே/
தொழுவதில் இறைமாறினும்
தொடர்வோம் அன்பால்/
உழுதிடும் நிலமாக
உள்ளத்தை மாற்றியே/
கொடி வண்ணம்
கோடி இருப்பினும்/
கொடியாகப் படர்ந்தே
கோலமாக இணைவோமே/
உயர்வு தாழ்வு
உணர்வில் வேண்டாம்/
செயலில் வேண்டும்
சேர்ந்தேப் பழகிடவே/
பன்மைக் குணத்தோரும்
புன்னகை மலந்திட/
ஒன்றியம் காத்திட
ஒண்றினைவோம் இந்தியராக/
சமத்துவ புறா. ஞான. அ.பாக்யராஜ்