கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 15

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 15

தமிழகத்தின் பெரும் துயரமான மதுவால் சீரழியும் குடும்பங்களில் ஒன்று கெளதமின் குடும்பம்.

கெளதமின் அப்பா சிங்காரம்,அம்மா வடிவுக்கரசி இருவரும் விவசாய கூலிகள்.சிங்காரம் வாங்கும் கூலி ₹ 400 அப்படியே மதுபான கடை மூலம் அரசின் கல்லாவை சென்றடையும்.. வடிவுக்கரசி வாங்கும் ₹ 200 தினக் கூலில்தான் குடும்பச் செலவுகள், கெளதம் படிப்பு செலவு, கடன் வட்டி யென அனைத்தையும் பார்த்து வந்தார்...

அன்று மதுபானக் கடையில் மதுவை அருந்திவிட்டு வீட்டுக்கு சைக்களில் வந்த சிங்காரம் போதையில் கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவுகள் ஆன தகவல்தான், உறவினர் மூலம் கல்லூரியில் இருந்த கெளதமுக்கு போன் மூலம் வந்த தகவல் ..

எலும்பு முறிவான தகவல் அறிந்ததும், திரிஷாவிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் வந்தது பேருந்து ஏறிய பின்தான் நினைவுக்கு வந்தது.ஓ.God..குடிகாரன் குடித்து விழுந்த அதிர்ச்சியில் திரிஷாவிடம் சொல்லாமல் வந்து விட்டோமே என விம்மி விம்மி அழுதான்..

அடுத்த வாரம் அவன் அக்கா " "சங்கீதாவின் வளைகாப்பு சீமந்தம்" செய்ய கடன் வாங்கி வைத்திருந்த ₹ 5000 எடுத்தவன்,சிங்காரத்தை திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்..

வகுப்பறையில் இருந்த திரிஷாவின் கண்கள் கெளதம் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து, விழிகளில் கண்ணீர்தான் வந்ததே தவிர, வழிகளில் கண்ணாளன் வரவில்லை..என்ன ஆனதோ ?ஏது ஆனதோ ? சென்ற மனக் கள்வனின் திரும்பா பயணம் அவளை சர்க்கரை ஆலை கரும்பாக பிழிந்து கொண்டிருந்தது

சிங்காரத்தை எமர்ஜென்சி வார்டில் சேர்த்ததும் அவர்க்கு மருத்துவர்கள் முதலுதவி கொடுத்து கொண்டிருந்தனர்..

வார்டுக்கு வெளியே நின்றிருந்த கெளதம் தந்தை அவதிப்படும் வேதனை ஒரு பக்கம்,திரிஷாவின் நினைவலைகள் ஒரு பக்கம் என அவனை வேலிகளை சுற்றும் ஓணான் போல் அவ்விடத்தில் சுற்ற வைத்தன ..

மறுநாள் கெளதமின் ஊர்க்கார பையன்கள் மூலம் சிங்காரம் விழுந்த தகவலை தெரிந்து கொண்ட திரிஷா.. கவலையில் ஆழ்ந்தாள்..

சிங்காரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கட்டிலில் படுக்க வைத்த தந்தை நிலையும் திரிஷாவின் பிரிவும் கெளதமை வேர் இல்லா மரமாக சாய்த்தன.. தன்னை தானே ஏதோ ஏதோ உலறிக் கொண்டிருந்தான் ..

திரிஷாவின் அப்பா அம்மாவிடம் கெளதம் அப்பா விழுந்த நிகழ்வை கூறியதும்.. அபிராமி ஐயோ பாவம் இப்பம் எப்படி இருக்காங்க என்றார்.. இப்போது நன்றாக இருப்பதாக தெரிவித்தாள் திரிஷா... இன்று எனக்கு முக்கியமான வேலை ஒன்று இருக்கு ஆகையால் இன்று செல்ல முடியாது..நாளை ஒரு எட்டுப் போய் பார்த்துவிட்டு வந்திடுவோம் என்றார் கமல்.. thanks dad என்றாள் திரிஷா..

கெளதம்.. அம்மா உணவகத்தில் நான்கு இட்லி வாங்கி சாப்பிட ஆரம்பித்தவனுக்கு , திரிஷா அவனது எச்சில் இட்லியை சாப்பிட்ட நிகழ்வு நினைவுக்கு வர .. இட்லியை சாப்பிடாமல் மூடி வைத்து பட்டினி கிடந்தான்..

மேட்டுத்திடல் வந்த கமல் தெரிந்த ஒருவர்க்கு போன் செய்து நோயாளி பெயர் சிங்காரம்.. விவரத்தை சொல்லி போனை கட் செய்து காத்திருக்க..

கெளதம் வாடிய பயிராக சோர்ந்து இருந்தவனுக்கு தெரியாது திரிஷா அங்கே வருவாள் என்று..

கமலின் போன் மணியடிக்க எடுத்து பேசியவர் ஓகே என்று கட் செய்ய..9 தாமஸ் சாலையை அடைந்தவர் .. சிறுவர் சிகிச்சை பிரிவின் முன் உள்ள வாயில் வழியாக உள்ளே செல்ல.. மூட்டு அறுவை சிகிச்சை பிரிவில் நுழைந்து தேடியபோது கெளதமை திரிஷா பார்த்து அதோ இருக்கிறார்கள் என்றாள்..

கெளதமும் அவர் வருகையை பார்த்தவன்.. வானவில்லாக🌈 ஜொலித்த படி .. வாங்க அப்பா, வாங்க அம்மா ,வா திரிஷா என்றான்.இப்பபரவாயில்லையா என்று அபிராமி சிங்காரத்திடம் கேட்க நல்லாயிருக்குமா .. என்றார் சிங்காரம்..

பேசிவிட்டு.. சில ஐநூறு ரூபாய் தாள்களை கெளதமின் கைகளில் திணித்தவாரே கமல் வாரேன்.. என்றார்..அப்பாவை பார்த்துக்கோ என்று அபிராமி சொல்ல சரிங்கம்மா என்றான்.. திரிஷா வாரேன் என்று சொல்லி தலையாட்ட பதிலுக்கு தலையை ஆட்டி சரி என்றான் கெளதம்...

அவர்கள் சென்றவுடன், தந்தையிடம் வந்த கெளதம் " நீ குடிக்கு அடிமையான.. நான்.. நீ வாங்கின கடனுக்கு அடிமையாகிறேன் "என்றான்..

மகன் சொல்வதை கேட்டு சிங்காரம் கண்ணீர் வடிக்க..

......தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்..

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (10-Apr-24, 6:41 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 15

மேலே