ரசிகை

அந்த ரசிகை எங்கடா போயிட்டா?

@@@@

ரசிகையா யாரு எங்க வீட்டில ரசிகை?

@@@@@@


உன் பொண்ணுத்தாண்டா மாப்பிள்ளை.


@@@@@

எம் பொண்ணு ரசிகையா?

#####

என்ன மச்சான் சொல்லற?


@@@@@

தினமும் அவள் கல்லூரிக்குப் போறதா நீ நெனச்சுகிட்டு இருக்கிற.

ஆனால் காலைல் கல்லூரிக்குப் போறா. மதிய உணவுக்குப் பின்

தினமும் தவறாமல் பகல் காட்சி பார்க்க ஒவ்வொரு திரையரங்காப்

போறா. நீ அவளுக்கு 'ரசிகா'னு பேரு வச்சது ரொம்பப்

பொர்த்தமான பேருடா மச்சான்.

@@@@@@

அட மச்சான். அந்தப் பேருக்கு என்ன அர்த்தமோ எனக்குத்

தெரியாது. அது ஒரு இந்தி நடிகையொட பேரு. இந்திப் பேரைப்

பிள்ளைகளுக்கு வைக்கிறது தானே நம்ம தமிழ்க் கலாச்சாரம்.

@@@@@

ஆமாம். ஆமாம். தமிழ்ப் பேரை வச்சா நம்ம மக்கள் உன்னையும்

மதிக்கமாட்டாங்க, உம் பொண்ணையும் கேவலமாப் பார்ப்பாங்க.

'கேவல்நாத்'. இதெல்லாம் ஒரு சாமி பேராம். எங்க பக்கத்து வீட்டுப்

பையனுக்கு வச்சிருக்கிறாங்க. அந்த 'கேவல்நாத்'கூட "ஸ்வீட்

நேம்"னு பாராட்டாறாங்க, காலம் மாறிப்போச்சு,

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Rashika = Protector of all Gods - Elegant - Beautiful ,

எழுதியவர் : மலர் (11-Apr-24, 9:41 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : rsigai
பார்வை : 50

மேலே