பொங்கி வந்த தமிழ் புத்தாண்டு

ஓராண்டு கழிந்தால் புது ஆண்டொன்று பிறக்கிறது!
ஒரு ஆண்டு கடந்தால்
வயதொன்று கூடுகிறது!
வருடம் ஒன்று மறைந்தால் மறையும் நேரம் நெருங்குகிறது!
இன்று சோபகிருது வருடம் பின்னேறி குரோதி வருடம் முன்னேறியுள்ளது!

சூரியன் மேஷ ராசியில் அவரது நாளில் குருவுடன் சேர்கிறார்!
சஷ்டி திதி கூடியுள்ளதால் முருகப்பன் அருள் பாலிக்கிறார்!
திருவாதிரை நட்சத்திரம் என்பதால் அவர் அப்பனும் ஆசி நல்குகிறார்!
இன்றுதித்த குரோதி வருடம் நிச்சயமாக நல்லவர்க்கு விரோதி இல்லை!

திருமணம் காண விழைவோர் அம்மணத்தின் நறுமணம் காண்பார்கள்!
குழந்தை பேறு இல்லாதார் இனிய மழலைச் செல்வம் ஈன்றெடுப்பார்கள்!
நேர்மையாய் உழைத்து உதவி வாழ்வோர் மேலும் உணர்வார்கள்!
அன்புடன் மனிதாபிமானம் கொண்டோர் என்றென்றும்
போற்றப்படுவார்கள்!

ஏன் என்று கேட்பவருக்கு தக்க விடைகள் கிடைக்கும்!
எதற்கு என்று வினவுவோருக்கு தக்க விளக்கம் கிடைக்கும்!
எப்படி என சிந்திப்போர்க்கு எப்படியும் நல்விடை கிட்டும்!
நான் நானில்லை என்றுணர்பவர்க்கு பூரண அமைதி கிட்டும்!

தமிழ் சித்திரை திருநாள் புவியில் அனைவரையும் வாழவைக்கட்டும்!
மனமார்ந்த இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் !

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (14-Apr-24, 9:32 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 18

மேலே