அருள்வான்

அருள்வான்.
11 / 04 / 2024
பிறை நிலா வானில் தோன்ற
நிறைவடையும் ரமலான் நோன்பு
இறை அருளை அள்ளி வந்து
குறைவின்றி அள்ளித் தரும் இறைநோன்பு
ஈத் முபாரக் என்று ஒருவரையொருவர்
தழுவி நல் சகோதரத்துவத்தை
இப்பார் முழுதும் இனிதாய் பரப்பிடும்
இஃப்த்தர் முடிக்கும் ஈகைத் திருநாளாம்.
உன் லாபத்தில் ஒரு பங்கை
கையேந்தும் ஏழைக்கு கொடுத்திட்டு
உன் பாவம் எல்லாம் கரைந்தோடிட
கையேந்தி மனமுருக தினமும் மன்றாடு
ஐந்து வேளை தொழுகையினை
இடைவிடாது தொடர்ந்திடு
எல்லாம் வல்ல இறைவன்
அல்லா ஓடிவந்து உனைத் தழுவி
மகிழ்வான்.. - உன் வாழ்வில்
உயர்வைத் தந்து அருள்வான்.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (11-Apr-24, 4:51 pm)
சேர்த்தது : ஜீவன்
பார்வை : 39

மேலே