க்ரோதி வருடப் புத்தாண்டுவாழ்த்துக்கள்
இந்த வருட தமிழ்ப் புத்தாண்டை
'க்ரோதி' என்ற பெயரில் ஏந்தி
வருகின்றாள் 'பஞ்சாங்கமாக' நம்
சித்திரை பைங்கிளி
ஐயகோ...இது என்ன 'க்ரோதி'
என்ற பெயர்....
ஆம்...இன்று நாம் காணும் உலகம்
க்ரோதம் தாங்கியதே...எங்கும் பகை
நாடும்...நாடும் பாகையில்
எங்கு திரும்பினாலும் புகையும் 'பகை'...க்ரோதம்
வீட்டிலேயும் பகை காண்கின்றோம்
சொத்துக்காக சொந்தத்தையும் மறந்து
'துரியோதனராய் மாறும் அண்ணன் தம்பிகள்
நாட்டை ஆள வரும் ஏராளமான காட்சிகள்
ஒருவருக்கொருவர் அடித்து கொள்கிறார்..
எங்கும் துஷ்ப்ரச்சாரம்....மக்கள் ஒன்றும்
புரியாது தவிக்க..
இதற்கிடையில்....தேர்தல்.....
ஒன்றும் புரியாது நிற்கும் மக்கள்
'க்ரோதத்தின்' உச்ச கட்டம்
ஒருவர் மீது ஒருவர் வார்த்தையால்
சரமாரி தாக்கிக் கொள்ளுதல்....
என்று...எப்போது தணியும் இந்த 'க்ரோதம்'
'க்ரோதியே' நீதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்
மக்கள் எல்லோரும் உண்மையில் 'க்ரோதம்' வெண்டார்
அவர்கள் நாடுவதும், வேண்டுவதும் சுதந்திர வாழ்வே
என்றும் குடியரசே....ஜனநாயக ஆட்சியே..
'க்ரோதியே' தமிழ்ப் புத்தாண்டே
நீ க்ரோதம் நீங்கி...நடைப் போடுவாய்
நாட்டில் எங்கும் 'சமரசம்' உலாவிடல் வேண்டும்
பொதுவுடமை..இந்நாடு 'எமதே' என்ற நாட்டுப் பற்று
எங்கும் அமைதி....அமைதி நிலவ வேண்டும்
தீயோராய் பல நாட்கள் வாழ்வதொழிந்து
நல்லோராய் ஒரு நாள் இனிதே வாழ்ந்திடும்
மனப் பக்குவம் வளர விடு தாயே...'க்ரோதி'
'க்ரோதி' என்ற உன்பெயர் மாறிட வேண்டும்
க்ரோதியில் சாந்தி காண வேண்டும்...சாந்தி நிலவ வேண்டும்
வாழ்ந்திடுவோம் இனிதாய்...வாழவைப்போமே
இனிய வாழ்க்கை மற்றவரையும் அதைக் கண்டு களிப்போம்...அதில் 'இறைவனைக் காண்போம்'
இனிய தமிழ்ப் புத்தாண்டு...வாழ்த்துக்கள்.