தமிழ் புத்தாண்டு வாழ்த்து குரோதி

அழகான வாழ்வென இறைவன் தர-நாம்,
அதுவான நேரமிது என ஏற்று வாங்க:

புதிரான பொருளெல்லாம் உள்ளே இருக்க-நம்
உதிரமெல்லாம் கொதித்தெழுந்து சிக்கலாகி:

இத்தனை சிக்கலை எப்படித் தீர்ப்பதென-நாம்
அத்தனை சக்தியையும் வரவழைத்துப் போராடி:

மனதினைப் பக்குவப் படுத்தி வெற்றி பெற-நாம்
தினமதை உரமென வைத்துக் கொள்வோம்.

"சோபகிருது"வில் சோகம் போக-நாம்
சுபமாக ஒன்று சொல்வோம் தீர்க்கமாக!

:குரோதி"யில் நமக்கு "விரோதி" இல்.

எழுதியவர் : சங். சொர்ணவேலு (14-Apr-24, 9:40 pm)
சேர்த்தது : SORNAVELU S
பார்வை : 21

மேலே