சித்திரை மகள்
சித்திரை மகள்.....!
14 / 04 / 2024
சித்திரை மகள்
சித்திரமாய் என் நெஞ்சில் நிறைந்து
நித்திரையை கலைத்து
நினைவினை குலைத்து
பத்தரை மாற்று தங்கமென
முத்திரை பதித்த நல்
கவிதைகளை காவியங்களை
தந்து சிரித்து நின்றாள்.
அவள் சீரிளமை என்
சிந்தையில் படுத்திய பாடெல்லாம்
பாட்டாய் ஏட்டில் பதித்திட
பணித்திட்டாள்.
அள்ள அள்ள அட்சய பாத்திரமாய்
ருசிக்க ருசிக்க கொம்பு மலைத்தேனாய்
புசிக்க புசிக்க பெரும் விருந்தாய்
அவள் இளமை...அவள் வளமை...
அவள் மென்மை...அவள் மேன்மை...
அவள் தொன்மை...அவள் உண்மை....
அவள் நளினம்.....அவள் வேகம்.....
அவள் தாகம்....அவள் தாக்கம்....
என்னை உன்மத்தனாகிவிட்டதே
இன்று மீண்டும் புதிதாய் பிறந்து
நடைபோட வருகிறாள்
வா சித்திரையே......!
என் வாழ்வினில்
பதித்திடு முத்திரையை.......!