நான் இளிச்சவாய் ஏமாளியா
பிரியாணி போச்சு, பிரியாணி போச்சு.
@@@##
என்னடா பிரியாணி போச்சுனு சொல்லிட்டு
வர்ற?
@@@@@#
ஏமாந்து போன எனக்குத்தான் தெரியும்.
பிரியாணியும் ஐநூறு ரூபாயும் போச்சு.
@@@@@@#
என்னடா சொல்ற?
@@#@####
ஒரு நீளதாடிக்காரன் என்னைக் கூப்பிட்டு,
"தம்பி, நான் சொல்லற வேலையை நீ
செஞ்சா உனக்கு ஒரு பிரியாணியும்
ஐநூறு ரூபாயும் தர்றேன்"னு சொன்னான்.
அவன் சொன்ன வேலையை முடிச்சு வந்து
இடது கை ஆள்காட்டி விரலைக் காட்டினா
பிராயாணியும் ஐநூறும் கிடைக்கும்னு
சொன்னான். அவன் சொன்ன வேலையை
முடிச்சு விட்டு அவன்கிட்ட வந்து இடது கை
ஆள்காட்டி விரலைக் காட்டினேன். "சரி
தம்பி. நான் சொன்ன வேலையை நீ
வெற்றிகரமா முடிச்சுட்டே. பாராட்டுக்கள்.
இறைச்சி சாப்பிடறது பாவம். நீ எனக்குச்
செய்தது சேவை. சேவைக்கும் பணம்
கொடுப்பதும் பணம் வாங்குவதும்
பாவம்டா தம்பி. நன்றி. போயிட்டு வா"னு
சொல்லி என்னை ஏமாத்திட்டான்டா.
@@@@@@@
ஏன்டா பிராயாணிக்கும் ஐநூறு
ரூபாயுக்கும் ஆசைப்பட்டு உன்னுடைய
உரிமையை அவனுக்கு விட்டுக்
கொடுத்துட்டு வந்திருக்கிறடா. நீ ஒரு
இளிச்சவாயன்டா. ஏமாளிடா.
###@@@@@#
நான் இளிச்சவாய் ஏமாளியா? நான்
இளிச்சவாய் ஏமாளியா?
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
