கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 23

கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 23

" அச்சம், மடம், நாணம் இம்மூன்றும் பெண்ணின் நற்குணங்கள் என்று சொல்லி கடந்த கால பெண்களை ஆண்கள் அடிமையாக வீட்டுக்குள் அடைத்து வைத்தனர் "

" தயக்கம், கூச்சம், பயம் இம்மூன்றால் இக்கால பெண்கள் தனக்கு தானே ஒரு கடிவாளத்தை போட்டுக் கொண்டு ஆண்களுக்கு அடிமையாக இருக்கின்றனர் " இப்படியாக முடங்கிக் கிடக்கும் பெண்ணாக நான் இருக்க மாட்டேன் எதையும் சந்திக்க முடிவெடுத்த திரிஷா..

" நான் மனைவியாக ஒரு நிமிடம் வாழ்ந்தாலும் போதும் அதுவும் உன் மனைவியாக " என்றாள் திரிஷா..

" வெறும் 17 நிமிடத்தில் எடுத்த முடிவு,17 ஆண்டுகள் வளர்த்த அப்பா, அம்மாவை தூக்கி எறிகின்ற முடிவு என்பதை உணர்ந்து கொள் " என்றான் கெளதம்..

" அப்பா அம்மா வெறும் ஆதார் கார்டு மாறி ஒரு அடையாளக் கார்டு அவ்வளவுதான் " ,வரக்கூடிய கணவன் " ATM கார்டு மாறி ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு நாளும் பயண் படுபவன் " என்றாள் திரிஷா..

இப்படியாக பேசிக் கொண்டே இருக்க மணி 11.30 AM ஆகிருந்தது.

" பெண் புத்தி பின் புத்தி " என்று நம்பிய " ஆண் புத்தி முன் புத்தி " திருமணம் செய்து கொள்வதே சரியான முடிவு என முடிவெடுத்த கெளதம்..

உடன் பணிபுரிந்த தோழன் ரவிக்கு உதவி கேட்டு போன் செய்து நடந்த விவரத்தை கூறினான், அவனும் சரியென்று கூறிவிட்டு.. அப்பா அம்மா விடம் தகவல் சொல்லி விடுகிறேன், என் ஊர்க்கு போங்க பார்க்கலாம், என்று ரவி கூறினான்..

கம்பம் - குமுளி நெடுஞ்சாலையில் தமிழகத்தையும் கேரளாவும் இணைந்து கூடும் மேற்கு தொடர்ச்சி மலைத் தாயின் மடியில் தவழும் பசுமை நிறம் அழகு, சில்லென்ற சிலருக்கும் காற்றின் சிரிப்பழகு, தத்தி நடை போடும் அருவிகள் நிறைந்த நடை அழகு , குயில்கள் பறவைகள் பாடும் தமிழ் அழகு யென ஜான் பென்னிகுவிக் பெற்றெடுத்த பத்தரை மாத தங்கமான கூடலூர் லோயர் கேம்ப் பகுதி தான் ரவியின் சொந்த ஊர்...

காதலர்கள் அந்த ஊரை தேர்ந்தெடுக்க காரணம்.. காதலர்களை தேடுவோர் அனைவரின் பார்வை சென்னை, கோவை போன்ற பெரு நகரங்களை நோக்கியே இருக்கும்.. கூடலூர் போன்ற நகரங்களை யோசிக்க மாட்டார்கள் என்பதால் கெளதம் அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தான்..

சங்கரன்கோவிலில் இருந்து நகரப் பேருந்துகளில் அதாவது டவுன் பஸ்ஸில் மட்டுமே பயணித்து கூடலூர் செல்வது என்பது கெளதமின் அடுத்த திட்டம்..இது ஏன் ? என்று கேட்டால்.. காதலரைத் தேடுவோர் அனைவரின் பார்வை மப்சல்னு சொல்லக் கூடிய தொலை தூர பேருந்தின் மீதே இருக்குமே ஒழிய டவுன் பஸ்களை கண்டு கொள்ள மாட்டார்கள்...

அடுத்தது பணம்... பணமாக கெளதமின் கையிருப்பு வெறும் 30 ரூபாய், பணத்திற்கு என்ன செய்வது என்று திரிஷாவிடம் கேட்டான்..அவள் கழுத்தில் கிடந்த தங்கச் செயினை காண்பித்து இரண்டு சவரன் இதை விற்று விடலாம் என்றாள்.. சங்கரன்கோவிலில் கடைகளில் எல்லாரும் அப்பாவுக்கு தெரிந்தவர்கள் .. ஆகையால் இங்கே விற்க முடியாது ..

ராஜபாளையம் சென்று விற்பனை செய்வது என்று முடிவெடுத்து.. ராஜபாளையம் செல்லும் நகரப் பேருந்தில் ஏறியவர்களை கரிவலம்வந்தநல்லூரில் இறக்கி விட்டனர்.அதுவரை தான், வைத்திருந்த 30 ரூபாய்க்கு இருவரும் பயணம் செய்ய முடிந்தது..

கரிவலம்வந்தநல்லூரில் இறங்கியவர்கள் தங்க கடைகளைத் தேடிப்பிடித்து ராஜா ஜூவல்லரி க்கு சென்று கேட்க, காதலர் இருவரையும் மேலும் கீழும் பார்த்த கடைக்காரர்.. நாங்க நகைகள் சேல்ஸ் ஒன்லி பழைய தங்கம் விலைக்கு வாங்குவது இல்லை,என்று கையை விரித்தார்..

மொபைலை விற்று அந்த ரூபாயில் ராஜபாளையம் வரை செல்வோம் என்று முடிவெடுத்து, பக்கத்தில் இருந்த ராஜலட்சுமி மொபைல் கடைக்கு சென்று..₹ 3000 மதிப்புள்ள மொபைலை ₹ 500 விற்று விட்டு வெளியே வந்தவர்கள் .

மொபைலை விற்று ஏமாந்தது போல்,நகையை விற்று ஏமாற்றம் அடைவதை தவிர்க்க அடகு வைக்க முடிவெடுத்து ராஜபாளையம் செல்ல நகரப் பேருந்துக்காக கரிவலம்வந்தநல்லூரில் மறைமுகமாக காத்திருந்தனர்..

என் இனிய தமிழ் மக்களே உங்கள் பாசத்துக்குரிய காதலருடன் நாமும் கூடலூர் செல்வோமா ? வாருங்கள்..

... தொடரும்

சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்

எழுதியவர் : சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ் (20-Apr-24, 1:25 pm)
சேர்த்தது : பாக்யராஜ்
பார்வை : 32

மேலே