உயிரும் நீ உறவும் நீ - பகுதி 1
"இந்த கொலைக்கு என்ன மோட்டிவ் இருக்கும் மேடம்?", "இந்த வருஷத்துல இது இதே டெம்ப்லேட்ல நடந்த நாலாவது கொலை, இது ஏதும் சைக்கோ கில்லரா இருக்குமா?", சீரியல் கில்லரா இருக்க வாய்ப்பு இருக்குனு சந்தேக படறீங்களா?", "கொலை செய்யப்பட்டு இருக்கற இந்த அசோக் ஒரு பாரன்சிக் பெத்தோலாஜிஸ்ட், அதுவும் இதுக்கு முன்னாடி இதே பேட்டன்ல கொலை செய்யப்பட்ட மத்த மூணு கொலைகளை அடாப்சி பண்ணி அதுக்கான ரிப்போட் கொடுத்தவர், அது மட்டும் இல்ல, இந்த நாலு பேருமே ஒருத்தவங்களுக்கு ஒருத்தவங்க நேரடியாகவோ மறைமுகமாகவோ சம்மந்தப்பட்டவர்கள் இல்ல. ஆனா இவங்க நாலு பேருமே ஏதோ ஒரு விஷயத்துல காமனா சம்மந்தப்பட்டு இருக்கலாம் னு ஏதும் தோணுதா?" பத்திரிக்கையாளர்களின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு செவிசாய்க்காமல் அசிஸ்டன்ட் கமிஷனர் அர்ச்சனா கொலை செய்யப்பட்டு இறந்து கிடந்த அசோக் உடலின் அருகே சென்று நின்றாள்.
தனது கை கடிகாரத்தை பார்த்தாள். நேரம் சரியாக ஒன்பது. சில முறை மெனு பொத்தானை அழுத்தி மனதிற்குள், "அதுக்குள்ள ஆயிரம் ஸ்டெப்ஸ் நடந்து இருக்கேன், இப்டியே போனா ஜிம் கு போகாமையே சிக்ஸ் பேக் எனக்கே வந்துரும் போல," என்று மனதிற்குள் நினைத்தபடியே "பெருமாள் அண்ணே, இங்க வாங்க, ஆர்த்தி எங்கே? வீட்டுக்குள்ள இருக்காளா னு செக் பண்ணிங்களா " என்று கேட்டாள் அர்ச்சனா.
"ஆர்த்தி மேடம் எங்க தேடியும் கிடைக்கல மேடம், அவங்க போன் கூட சுவிட்ச் ஆப் ல இருக்கு, அவங்க போட்டோ ஆல்ரெடி டிபாட்மென்ட் ல குடுத்து சர்ச் பண்ண சொல்லியாச்சு மேடம். அது மட்டும் இல்ல, வீட்டுக்குள்ள ஏதும் கடிதமோ வேற ஏதும் தடயமோ இருக்கா னு பாத்துட்டு இருக்காங்க மேடம் " என்று பதில் சொன்னார் கான்ஸ்டபிள் பெருமாள்சாமி.
"ம்ம்ம், எஸ்.ஐ., நீங்க ஒண்ணு பண்ணுங்க, ரொம்ப கேர்புல்லா க்ரைம் சீன கேப்ச்சர் பண்ணுங்க, எல்லா ஆங்கிள் லயும் போட்டோ எடுங்க, சின்ன சின்ன தடயங்களை கூட மிச்சம் வைக்காதிங்க, முக்கியமா பாரன்சிக் வரவரைக்கும் க்ரைம் ஸ்பாட்டை யாரும் அக்சஸ் பண்ண விடாதீங்க, கிடைக்கற பிங்கர் பிரிண்ட்ஸ் சுவேட் சலைவா சாம்பிள்ஸ் எல்லாம் ப்ராபரா பாரன்சிக் கலெக்ட் பண்ண சொல்லுங்க. கேர்புல்லா இருங்க, நான் போனதுக்கு பிறகு இந்த பிரஸ் காரங்களை என்டேர்டைன் பண்ணாதீங்க, எல்லாருக்கும் டி காபி டிபன் எல்லாம் வாங்கி குடுத்து வாய அடைச்சு சீக்கிரம் அனுப்பிடுங்க. எப்படியும் மேலிடத்துல இருந்து பிரஷர் வரும், நம்மளுக்கு இந்த நாலு கொலை ல ஒரு துப்பு கூட கிடைக்கலையா, நீங்க எல்லாம் துப்பு கெட்ட ஆளுங்க னு மக்களும் பத்திரிக்கைகளும் அரசியல்வாதிகளும் நம்ம மேலிடமும் நாலா பக்கத்துல இருந்து வச்சு செய்வாங்க, இனிமே நமக்கு ஏது தூக்கம், அவ்ளோதான், பை த வே, வீட்ல மத்த இடங்கள் ல தேடி பாருங்க, கண்டிப்பா அந்த பாஸ்டர்ட் ஏதும் தடயம் விட்டு போயிருப்பான், ஆல்சோ ஆர்த்தி பத்தி ஏதும் இன்பார்மேஷன் தெரிஞ்சா இம்மிடியட்டா கால் பண்ணுங்க." என்றாள் அர்ச்சனா.
"கண்டிப்பா மேடம், நான் செக் பண்றேன்." என்றாள் எஸ்.ஐ. ப்ரீத்தா. அங்கிருந்து நகர்ந்து சென்றாள் அர்ச்சனா.
"அந்த க்ரைம் பிரான்ச் எஸ்.ஐ. விஜய் வந்தானா இல்லையா, குவாட்டர்ஸ் ல வீடு குடுத்தாலும் குடுத்தாங்க தூங்கி தூங்கி தான் வேலை செய்றான். அவனோட வேலைகளை கூட நம்ம தான் பாக்க வேண்டி இருக்கு" என்றபடி கான்ஸ்டபிள் பெருமாள்சாமியை நோக்கி நடந்தாள் ப்ரீத்தா.
தனது மொபைல் போனை எடுத்து மீண்டும் ஆர்த்திக்கு டயல் செய்து பார்த்தாள் அர்ச்சனா. சுவிச் ஆப்.
"மேடம், இந்த கொலை ஆர்த்தி மேடம் பண்ணி இருப்பாங்களா?" என்று கேட்டார் பெருமாள்சாமி.
"யோவ், அது எப்டியா அதுக்குள்ள தெரியும். அது மட்டும் இல்ல, இதை ஏன் என்கிட்டே கேக்குற, அந்த ஏ.சி. கிட்ட கேக்க வேண்டியது தானே" என்றாள் ப்ரீத்தா.
"ஏன் மேடம், அந்த சிடுமூஞ்சி கிட்ட மாட்டிட்டு நான் முழிக்கவா, அந்த ஆர்த்தி இந்த அர்ச்சனா மேடம் கு பிரெண்டு. ஆனா கொலை நடந்து இருக்கறது அந்த ஆர்த்தி வீட்டு வாசல் படி ல. அது மட்டும் இல்ல. அந்த ஆர்த்தி மிஸ்ஸிங். அப்போ கண்டிப்பா இதுக்கும் ஆர்த்திக்கும் ஏதோ சம்மந்தம் இருக்கும் னு தானே அர்த்தம்." என்கிறார் பெருமாள்சாமி.
"நீ சொன்னா கேக்க மாட்ட. இரு, அந்த அர்ச்சனா மேடம் கிட்ட சொல்றேன்" என்றபடி ப்ரீத்தா அங்கிருந்து அர்ச்சனா நோக்கி நகர, "மேடம், மேடம், நீங்க வேற என் சோலியை முடிச்சுராதிங்க" என்றபடி ப்ரீத்தாவின் பின்னால் நடந்தார் பெருமாள்சாமி.
"ஹாய் ப்ரீத்தா" என்றபடி அங்கே வந்தான் விஜய்.
"வாங்க விஜய், உங்களுக்கு நாங்க எட்டு மணி ல இருந்து கால் பண்ணிட்டு இருந்தோம், ஆனா நீங்க எட்டே முக்காலுக்கு தான் எங்க போனை எடுத்தீங்க. போங்க, போய்ட்டு அர்ச்சனா மேடம் அஹ் பாருங்க. கொலை வெறி ல இருக்காங்க. பத்திரிக்கை காரங்க வேற வெச்சு செஞ்சுட்டாங்க. அதுமட்டும் இல்ல, இது அவங்க க்ளோஸ் பிரண்ட் ஆர்த்தி வீடு. கொலை செய்யப்பட்டு இருக்கறது நம்ம பாரன்சிக் பெத்தோலோஜிஸ்ட். அவருக்கும் ஆர்த்தி மேடம்க்கும் இடைல காதல் வேற இருந்திருக்கு. இப்போ ஆர்த்தி அப்ஸ்காண்ட். பெரிய பிரச்சனை. போங்க போய்ட்டு அர்ச்சனாவோட அர்ச்சனை வாங்கிட்டு வாங்க, இன்வெஸ்டிகேஷனை இனிதே தொடங்கலாம்." என்றாள் ப்ரீத்தா.
"சரி சரி, நான் போய்ட்டு பாத்துட்டு வரேன்" என்றபடி விஜய் அர்ச்சனாவை நோக்கி நடந்தான்.
"ப்ரீத்தா மேடம்" பின்னால் இருந்து குரல் கேட்க திரும்பி பார்த்தாள் ப்ரீத்தா.
"ஓ, வாங்க பாரன்சிக் எக்ஸ்பெர்ட்ஸ், நல்லா இருக்கீங்களா," என்றபடி யோகா மற்றும் கீதா இருவருக்கும் கைகொடுத்தாள் ப்ரீத்தா.
"ஹாய் ப்ரீத்தா, எப்படி இருக்க, ரொம்ப நாள் ஆச்சு டி உன்ன பார்த்து. இப்டி ஏதும் இன்வெஸ்டிகேஷன் வந்தா தான் பாக்க முடியுது," என்றாள் கீதா.
"நம்ம பொழப்பு அப்டி, சரி, உங்க வேலையை தொடங்குங்க" என்றாள் ப்ரீத்தா.
வெளியே,
"குட் மார்னிங் மேடம்" என்றான் விஜய்.
"விஜய், உங்க ஈஸி கோயிங் ஆட்டிடியூட் எனக்கு சுத்தமா பிடிக்கல, யு வில் சூன் கெட் எ ஸ்டிட் மெமோ பிரம் தி டாப். ஐ கென்னாட் சேவ் யு ஆல் தி டைம். ஐ மீன் இட். யு ஆர் ஸச் எ நான்சென்........." அர்ச்சனா திட்டி முடிப்பதற்குள் "மேடம், பேருக்கு ஏத்தமாதிரி உங்க அர்ச்சனைகள் போதும் மேடம். நான் போயி வேலைய பாக்கறேன், வழக்கம் போல இந்த கேஸ் லே என்கூட சேம் டீம் தான் வேலை செய்ய போறாங்களா" என்றான் விஜய்.
"விஜய், பை சீலிங் தி சிவியாரிட்டி ஆப் தி கேஸ், நான் மேலிடத்துல பர்மிஷன் வாங்கி ஒரு ஸ்பெஷல் டீம் பார்ம் பண்ண போறேன், பட் ஷ்யூர், நீ அந்த டீம் ல இருப்ப. ஆனா யு ஆர் நாட் கோயிங் டு லீட் தி டீம். லெட்ஸ் டிஸ்கஸ் வித் ஹையர் அபீஷியல்ஸ் அண்ட் லெட் யு நோ. இப்போ போயி வேலைய பாருங்க" என்றாள் அர்ச்சனா.
கொலை செய்யப்பட்டு கிடந்த அந்த அசோக்கின் உடல் அருகே வந்து நின்றான் விஜய்.
ஏற்கனவே அங்கே நின்றுகொண்டு இருந்த ப்ரீத்தாவிடம் "ப்ரீத்தா, ஜோக்ஸ் அபார்ட். இந்த கொலை நடந்து இருக்குற விதத்தை பாத்தா, எனக்கென்னவோ ஆர்த்தி பண்ணி இருப்பாங்க னு தோணல. " என்றான் விஜய்.
"ஆர்த்தி தான் பண்ணி இருப்பாங்க னு யாரும் கன்குலூட் பண்ணலையே" என்றாள் ப்ரீத்தா.
"பட் செனாரியோஸ் வெச்சு பாக்கும்போது ப்ரைம் சஸ்பெக்ட் ஆர்த்தி னு தானே நான் கேஸ் ஸ்டார்ட் பண்ணனும், காஸ் ஷி இஸ் மிஸ்ஸிங், பிளேஸ் ஆப் மர்டர் அவங்க வீட்டு வாசல். சோ....அது தான் காரணம்" என்றான் விஜய்.
"விஜய், ஏற்கனவே உனக்கும் ஆர்த்திக்கும் இருக்குற பிரச்சனை தெரிஞ்சு தான் அர்ச்சனா மேடம் இந்த கேஸ் ல உன்ன லீட் அஹ் போட முட்டுக்கட்டை போடறாங்க, இன்னும் நீ இப்டியே பண்ணா என்ன அர்த்தம். உன்னோட சஸ்பெக்ஷன்க்கான காரணம் சரி தான், ஆனா ஆர்த்தி மிஸ்ஸிங் அண்ட் போன் சுவிச் ஆப் மட்டும் வெச்சு அவங்கள ப்ரைம் சஸ்பெக்ட் ஆஹ் ஆக்க கூடாது. நாம போலீஸ். நமக்கு எமோஷனல் இன்டெலிஜென்ஸ் ரொம்ப முக்கியம். ஸ்டார்டிங் ல தப்பான ஆங்கிள் ல போனா குற்றவாளிகள் ஈஸியா தப்பிச்சுருவாங்க. இப்போ இருக்குற இந்த சோசியல் மீடியா ல வேற கிழி கிழி னு கிழிச்சுருவாங்க" என்றாள் ப்ரீத்தா.
"அதுவும் சரி தான், மதன் கௌரி, சரவணன் டீகோட்ஸ், கார்த்திக் மாயகுமார்,பாபுசங்கர் ஸ்டோரீஸ் னு நம்ம ஆளுங்க நமக்கு முன்னாடியே கேஸ் அஹ் கிளோஸ் பண்ற அளவுக்கு பேசுவாங்க. நாம போலீஸ் அஹ் அவங்க போலீஸ் அஹ் னு கூட தெரியாத அளவுக்கு அவங்க....." விஜய் முடிப்பதற்குள் "மினிட்ஸ் மிஸ்டரி, ரிஷீபீடியா எல்லாம் விட்டுடீங்க விஜய்" என்றாள் ப்ரீத்தா. "ஆமாம் அவங்களும் தான், ஆனா இந்த ரிஷீபீடியா இப்போ எல்லாம் ஆளையே காணுமே" என்றான் விஜய்.
"ஓ, அதையும் கேஸ் ரெஜிஸ்டர் பண்ணி கண்டு புடிங்களேன் நீங்க" என்றாள் ப்ரீத்தா.
"மேடம், ரொம்ப கிண்டல் பண்றீங்க, பாருங்க, ஒருநாள் நான் பெரிய ஆல் ஆகா தான் போறேன், அப்போ இந்த மீடியா எல்லாம் என்னை பாராட்டி தான் பேசுவாங்க. அப்போ பொறாமை படுங்க பாருங்க" என்றபடி போனை எடுத்துக்கொண்டு விலகி சென்றான் விஜய்.
"ஆல் தி பெஸ்ட் விஜய்" என்றபடி "கீதா, யோகா, என்ன நினைக்கறீங்க நீங்க?" என்றாள் ப்ரீத்தா.
"ப்ரீத்தா, உயிர் பிரிஞ்சு ஆல்மோஸ்ட் எட்டு மணி நேரம் மேல ஆயிருச்சு. காஸ் ஆப் டெத்... நீ சொன்ன மாதிரி தான், மல்டிபிள் ஸ்டேபிங். பிளட் புல்லா ட்ரைன் ஆகி கார்டியாக் அர்ரெஸ்ட் ஆயிருக்கு. விக்டிம் எதிர்த்து சண்டை போட்ட மாதிரியோ இல்லனா கட்டிப்போட்டு கொடுமை படுத்தி மயக்க ஊசி போட்டு னு எந்த ஒரு விஷயமும் தெரில. சோ, பக்கா, விக்டிம் வீட்டுக்கு வெளில வந்து நின்னு இருக்கணும். யாரோ கதவை திறந்த உடனே இவரை உள்ள இருந்து குத்தி இருக்கணும்" என்றாள் கீதா.
"அது எப்படி அவ்ளோ உறுதியா சொல்ற, கதவை திறந்த ஆள் தான் குத்தி இருக்கணும் னு." என்றாள் ப்ரீத்தா.
"ஆமா, அல்மோஸ்ட் எல்லா ஸ்டெப்பிங்கும் முன் பக்கமா தான் விழுந்து இருக்கு, இவர் கத்த கூடாதுனு முதல் குத்து வாய் ல குத்தி அந்த கத்திய எடுக்காமயே அப்டியே விட்டு இருக்காங்க, வேற கத்தி வெச்சு அல்மோஸ்ட் முப்பது முறைக்கு மேல குத்தி இருக்காங்க. இதுல முக்கியமான விஷயம், இறந்த பிறகு கூட ஒரு சில கத்தி குத்துக்கள் விழுந்து இருக்கு. ஒரு சில கத்தி குத்துக்கள் இறந்து இருபது நிமிடங்கள் கு மேல விழுந்து இருக்கு. " என்றான் யோகா.
"பட் ஒரு விஷயம், பிங்கர்ப்ரின்ட்ஸ் ஆன் தி டோர் நாப், உள்ளே சோபா கு கீழ இருந்த கத்தி அண்ட் அல்மோஸ்ட் எல்லா இடத்துலயும் ஆர்த்தியோடது தான் இருக்கு. இன்னும் சொல்லப்போனா ஆர்த்தி இவரை கத்தியால் குத்தும்போது வெறும் காலோட இருந்து இருக்காங்க, கீழே இருந்த ரத்தத்துக்கு மேல நடந்து போயிருக்காங்க, அதோ அங்க பாரு, டோர்ஸ்டெப் ல இருக்குற அந்த ரத்தத்துக்கு மேல சில புட் மார்க்ஸ் இருக்கு, அது வீட்டுக்குள்ள போயி இருக்கு, தென் வீட்டுக்குள்ள யூஸ் பண்ற ஸ்லிப்பர்ஸ் போடு இருக்கு, தோ, அந்த ஸ்லிப்பர்ஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போயி இருக்கு அந்த புட் பிரிண்ட்ஸ். அதுக்கு பிறகு, அங்கே இருந்து ரிட்டர்ன் வரல. அதுக்கு பதில் சிலிப்பேர்ட் புட்பிரிண்ட்ஸ் வந்து இருக்கு. அகைன் பாடி கிட்ட வந்து இருக்கு, பிறகு இன்னும் பலமுறை குத்தி இருக்கு, இதெல்லாம் பாக்கும்போது ஆர்த்தி கென் பி தி ப்ரைம் அண்ட் ஒன் அண்ட் ஒன்லி சஸ்பெக்ட்." என்றாள் கீதா.
"பட் ஸ்டில், தேரிலேட் போரென்சிக் அடாப்சி முடிஞ்சு தான் ஏதும் சொல்ல முடியும், தே ஆர் கலெக்ட்டிங் அதர் டீடெயில்ஸ், இன்குலூடிங் DNA சேம்பிள்ஸ், மத்த பாசிபிள் திங்ஸ். பாக்கலாம்" என்றாள் கீதா.
"ப்ரீத்தா, ப்ளீஸ் கம்" என்றாள் அர்ச்சனா வெளியில் இருந்து.
"எஸ் மேடம்" என்றபடி வெளியே வந்தாள் ப்ரீத்தா.
"போரென்சிக் வேலை முடிஞ்சுதா" என்றாள் அர்ச்சனா.
"முடிஞ்சுது மேடம், நெக்ஸ்ட் CCTV அண்ட் மொபைல் ட்ராக்கிங் விஷயங்கள் பிளான் பண்றோம் மேடம், இப்போ விஜய் இதுல இன்வால்வ் ஆகப்போறாரா மேடம்" என்றாள் ப்ரீத்தா.
"என்னோட மைண்ட் என்ன சொல்லுதுன்னா வி கன்னாட் அவாய்ட் ஹிம், இது அவனோட டெஸ்க் ஜாப் தான், ஆனா நீ ஏன் கேக்கற னு எனக்கு தெரியும், இவனுக்கும் ஆர்த்தி கும் இருக்கற பிரச்சனை என்ன னு தெரியும். சோ, பையாஸ்ட் ஆக சான்செஸ் இருக்கு னு நினைக்கற, நான் மேல பேசி இருக்கேன், ஹி கென் பி இன் டீம் பட் நாட் அஸ் லீட். டோன்ட் ஒர்ரி" என்றாள் அர்ச்சனா.
"சரி மேடம், நீங்க கிளம்புங்க மேடம், ஆர்த்தி பத்தி ஏதும் தகவல் இருந்தா உடனே நான் உங்கள காண்டாக்ட் பண்றேன்." என்றாள் ப்ரீத்தா.
அர்ச்சனாவின் கார் வெளியே செல்ல, ப்ரீத்தா வீட்டின் கதவருகே சென்று பாரன்சிக் டிபாட்மென்ட் ஆட்களுடன் பேசத்தொடங்கினாள்.
பகுதி 1 முடிந்தது.