உயிரும் நீ உறவும் நீ - பகுதி 2

"ஆர்த்தி அண்ட் அசோக் நடுவில நல்ல ஒரு ரொமான்டிக் காதல் கதை இருக்கு னு சொல்லறாங்களே ப்ரீத்தா மேடம், நீங்க அதைப்பத்தி என்ன நினைக்கறீங்க ?" என்றான் விஜய்.

"விஜய், கொஞ்சம் சீரியஸ் ஆஹ் நடந்துக்கறீங்களா ப்ளீஸ். வி ஆல் நோ அபவுட் யுவர் ப்ராபளம் வித் ஆர்த்தி. சோ ப்ளீஸ் அவங்க நேம் ஸ்பாயில் பண்ற மாதிரி எந்த ஒரு வார்த்தையும் விடவேணாம். பிரஸ் எல்லாம் வேற இருக்காங்க. சோ நீங்க கொஞ்சம் உங்க அதிக பிரசங்கி தனம் எல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு கொஞ்சம் சீரியஸ் ஆஹ் வேலை பாத்தா நல்லா இருக்கும் " என்றாள் ப்ரீத்தா .

"நான் கேஸ்க்கு சம்மந்தப்பட்ட கேள்வி தானே கேட்டேன். நீங்க சொல்லலைன்னா என்ன , சொல்ல வேற ஆளா இல்ல, நான் அப்புறம் கேட்டு தெரிஞ்சுக்கறேன்." என்றபடி விஜய் பிரஸ் ஆட்களின் அருகில் வந்தான்.

"சார், உங்களுக்கு டைட்டில் கார்ட் போட்டதுமே கிளைமாக்ஸ் வேணுமா, போங்க சார். நாங்க சொல்லி அனுப்பறோம், அப்போ வாங்க. எங்களுக்கு பாதி பிரச்சனை அக்யூஸ்ட் கொடுக்கறாங்க, பாதி நீங்க குடுக்கறீங்க . கொஞ்சம் நிம்மதியா எங்களை வேலை செய்ய விடுங்க , போங்க சார்" என்றான் விஜய்.

"சார், எங்களுக்கும் இது தான் வேலை. மக்களோட பாதுகாப்பை நீங்க மனசுல நிறுத்தி வேலை செஞ்சு இருந்தா இப்படி நாலு கொலை நடந்து இருக்காது. இப்போ அந்த ஆர்த்தி இங்க இல்ல. உங்க அனுமானதுல அவங்க கொன்னு இருக்கலாம் இந்த அசோக் ஆஹ் னு நினைக்கறீங்க. ஆனா அந்த ஆர்த்தி இப்ப இங்க காணும். அவங்க கொலை செஞ்சுட்டு தப்பிச்சு இருந்தா பரவால்ல. ஆனா அவங்கள இன்னும் கண்டுபுடிக்கலையே. அவங்க போன் எங்கே. நேத்து நைட் அவங்க எங்க இருந்தாங்க. அசோக் ஏன் எதற்கு எப்போ இங்க வந்தாரு, எதுக்கும் உங்ககிட்ட ஆன்சர் இல்ல." பத்திரிக்கையாளர்கள் அடுக்கிக்கொண்டே செல்ல,

"எக்ஸ்க்யூஸ் மீ சார், கண்டிப்பா டிபார்ட்மென்ட் உங்களுக்கு வேண்டிய தகவல் கொடுக்கும். ப்ளீஸ் கிளம்புங்க' என்றபடி ப்ரீத்தா அங்கே வந்தாள் .

"இதே தான் மத்த மூணு கொலைக்கும் சொன்னீங்க. ஒண்ணும் நடக்கல . பாக்கலாம்" என்றபடி பத்திரிக்கையாளர்கள் கலைந்து செல்ல, "இறந்த உடலை போஸ்ட்மார்ட்டம் செய்ய கொண்டு சென்றனர் பாரன்சிக் ஆட்கள்.

"ஆர்த்தி பிரென்ட் தானே இந்த அர்ச்சனா மேடம் , அவங்க கிட்ட ஒரு விசாரணையை போட்டா என்ன," சிரித்தபடி ப்ரீத்தாவிடம் சொன்னான் விஜய்.

"ஓ தாராளமா, ப்ராப்பர் ஆர்டர் கு அப்ளை பண்ணலாமா " என்றாள் ப்ரீத்தா.

"என்ன பயமுறுத்தறீங்களா , கண்டிப்பா ஒருநாள் அது நடக்கும் தான்" என்றான் விஜய்.

"விஜய், ஆர்த்தி கூட இருக்கற பிரச்சனைல நீங்க ஏன் இந்த கொலை பண்ணிட்டு அவங்கள பிரேம் பண்ண இப்டி பண்ண கூடாது?" என்றாள் ப்ரீத்தா.

"யப்பா, சீனியர் மேல என்ன ஒரு பாசம். சரி சரி ஒரு ஜோக் தானே சொன்னேன். அதுக்கு இப்டி சீரியஸ் ஆனா எப்படி?" என்றான் விஜய்.

"சரி விஜய், யு ஜஸ்ட் டேக் பார்வர்ட் . நான் ஸ்டேஷன் கு கிளம்பறேன். பெருமாள், நீங்க விஜய் கூட இருங்க " என்றபடி கிளம்பினாள் ப்ரீத்தா.

ப்ரீத்தா கிளம்பியதும் "பெருமாள் அண்ணே , இந்த ப்ரீத்தா மேடம் எப்பவுமே இப்படித்தானா , " என்றான் விஜய்.

"எப்படி சார்" என்றார் பெருமாள்.

"போங்க அண்ணே , நான் ஏதாவது சொல்ல நீங்க அந்த ப்ரீத்தா கிட்ட வத்தி வச்சுட்டா?" என்றான் விஜய்.

"அப்போ ஏதோ டபுள் மீனிங் ல கேட்டு இருக்கீங்க" என்றார் பெருமாள்.

"அண்ணே , வயசுக்கு ஏத்த பேச்சு பேசுங்க " என்றான் விஜய்.

"நானா, சரி சார்" என்றார் பெருமாள்.

சரி, நான் ஒரு டீ சாப்பிட்டு கிளம்பறேன் , நீங்க இங்க இருந்து எல்லா பார்மாலிடீஸ் முடிச்சுட்டு வாங்க" என்றபடி கிளம்பினான் விஜய்.ஸ்டேஷனில்....

"ப்ரீத்தா, எனி இன்பார்மேஷன் ?" என்றபடி உள்ளே வந்தாள் அர்ச்சனா.

"இல்ல மேடம், சின்ன சின்ன அப்டேஷன் இருக்கு. ஆனா அதுனால எந்த பயனும் இல்ல . சேம் லைக் ப்ரிவியஸ் கேஸஸ் , இர்ரெலெவன்ட் இனபானர்மேஷன்ஸ் தான் ." என்றாள் ப்ரீத்தா.

"என்ன அது" என்றாள் அர்ச்சனா.

பாரன்சிக் ஆட்கள் சொன்ன தகவல்களை சொல்லி முடித்தாள் ப்ரீத்தா .

"வாட் நான்சென்ஸ் , ஆர்த்தி ஏன் கொலை செய்யணும் , லெட் பாரன்சிக் டூ தேர் ஒர்க் . யார் அக்யுஸ்ட் னு நாம கண்டுபுடிக்கலாம்." கோபமாக அர்ச்சனா பேசுவது ப்ரீத்தாவிற்கு புரிந்தது.

"மேடம், உங்க கோவம் புரியுது , ஆனா பாரன்சிக் நமக்காக தான் அந்த அறிவுரைகள் சொன்னாங்க . அவங்க சொல்றத நாம அப்டி நெக்லெக்ட் பண்ண முடியாது." என்றாள் ப்ரீத்தா.

"அக்ரீ ப்ரீத்தா , பட் என்ன மோட்டிவ் இருக்கும், அவ அப்படி பண்ற ஆள் இல்ல , அது உனக்கும் தெரியும். அவளை பத்தி உனக்கு தெரியாதா. அவ ஓர் சோசியல் ஆக்டிவிஸ்ட். அன்பை பகிருங்கள் அது இதுன்னு பேசிட்டு அனாதைகளுக்கு உதவிட்டு காலம் தள்ளும் ஆள் . அவளோட தம்பி தங்கை ரெண்டு பேருக்கும் ஆக்சிடென்ட் ஆனதுல இருந்து அவ இன்னும் மீளவே இல்ல . இவ்ளோ நாள் நான்கூட அவகிட்ட சொல்லிட்டே தான் இருந்தேன், நான் மட்டும் இல்ல. என்னோட அப்பா அண்ட் அண்ணன் கூட. எங்ககூட எங்க வீட்ல வந்து தங்கிடு னு , ஆனா அவதான், என் தம்பி தங்கை வாழ்ந்த வீடு, நான் இங்கேயே இருக்கேன் . நான் இங்கே இருந்தா அவங்களோட ஆத்மா என்கூடவே இருக்கும் னு சொல்லிக்கிட்டு இந்த வீட்ல தனியா இருந்தா" என்றாள் அர்ச்சனா.

"மேடம், எனக்கு புரியுது. ஆனா இப்போ அந்த அசோக் கொலை, ஆர்த்தி அப்ஸ்காண்ட் . போன் ஆப். இதுக்கு என்ன அர்த்தம் . கண்டிப்பா இது கோய்ன்ஸிடென்ஸ் இல்ல. ஏதோ தப்பா நடந்து இருக்கு ." என்றாள் ப்ரீத்தா.

"யா ஐ டூ அக்ரீ , பட் , ஆர்த்தி மிஸ்ஸிங் மட்டும் காரணமா வெச்சு அவளை அக்யுசேஷன் பண்றது எனக்கு சரி னு படல " என்றாள் அர்ச்சனா.

"மேடம், விஜய் தான் பயஸ்ட் ஆஹ் இருப்பான் னு நெனச்சேன். சாரி டு சே , நீங்களும் பயஸ்ட் ஆஹ் தான் இருக்கீங்க " என்றாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா , மைண்ட் யுவர் டங் , " என்றாள் அர்ச்சனா.

"சாரி மேடம், ஐ செட் வாட் ஐ பீல் " என்றபடி வெளியே நடந்தாள் ப்ரீத்தா.

ப்ரீத்தா ப்ரீத்தா ....." அர்ச்சனா கூப்பிட கூப்பிட கேட்காமல் நடந்தாள் ப்ரீத்தா.

"டேம் இட் " என்றபடி போனை எடுத்து ப்ரீத்தாவிற்கு கால் செய்தாள் அர்ச்சனா.

"சொல்லுங்க மேடம்" என்று சற்றே கோபமான தொணியில் சொன்னாள் ப்ரீத்தா.

"ப்ரீத்தா, கம் பேக் " என்றாள் அர்ச்சனா.

"மேடம், மை டூட்டி பினிஷ்ட் , ஐ வில் மீட் யூ ஈவினிங் இன் யுவர் ஹோம் " என்றபடி போனை கட் செய்துவிட்டு தனது வண்டியை ஸ்டார்ட் செய்தாள் ப்ரீத்தா.

"இந்த ப்ரீத்தா ரொம்ப தான்... அஜய் கிட்ட சொல்லி மிரட்டி வைக்கணும்" என்று மனதிற்குள் நினைத்தபடியே போனை எடுத்து தனது அண்ணனுக்கு கால் செய்தாள் அர்ச்சனா. "ஐயோ வேலை டென்சன் ல முக்கியமான விஷயத்த அவன்கிட்ட சொல்லலியே " என்றபடி டயல் செய்தாள் .

"ஹலோ அச்சு , என்ன மத்தியானம் சாப்பிட கூட ன் வரல. ப்ரீத்தா கூட போன் எடுக்கல, வாட்ஸப் ல கூட ஆன்லைன் வரவே இல்ல ரெண்டு பேரும் , என்ன ஆச்சு எனிதிங் சீரியஸ் ?" என்று கேட்டான் அஜய்.

"அஜய் , எங்கே இருக்க நீ " என்றாள் அர்ச்சனா.

"நான் என்ன கேக்கறேன் நீ என்ன கேக்கறே" என்றான் அஜய்.

"சொல்லு அஜய், எங்க இருக்க நீ?" என்றாள் அர்ச்சனா.

"ஆர் அண்ட் டி லெப் ல தான்." என்றான் அஜய்.

"அஜய், ஐ ஹேவ் எ பேட் நியூஸ் பார் யூ " என்றாள் அர்ச்சனா.

"பேட் நியூஸ் ஆஹ், என்ன டி, என்ன சொல்ற, எப்பவும்போல் ஏதும் கேம் பிளே பண்றியா?" என்றான் அஜய்.

"இல்ல அஜய் டேம் சீரியஸ் , அசோக் இஸ் டெட் , மர்டர்ட் , " என்றாள் அர்ச்சனா.

"என்ன சொல்ற, எங்கே , நீ இப்ப எங்க இருக்க" பதறினான் அஜய்.

"நான் வீட்டுக்கு கிளம்பிட்டேன் , நீயும் வா, பேசலாம் டீட்டைல் ஆஹ்" என்றபடி கட் செய்தாள் அர்ச்சனா.

அஜய் தன்னை கண்ட்ரோல் செய்ய முடியாமல் போனை எடுத்தான். "டேய் எங்க இருக்க " என்றான் அஜய்.

"அதான் உன்னோட தங்கை சொல்லி இருப்பாளே , உண்மை தான், அசோக் ...." என்றான் விஜய்.

"நீ எங்கே இருக்க" என்றான் அஜய் .

"நான் தான் இன்வெஸ்டிகட் பண்றேன் , ரிப்போர்ட் அந்த கேஸ் பைல் எடுத்துட்டு கிளம்ப போறேன் " என்றான் விஜய்.

"நீ இப்ப எங்க இருக்க சொல்லு நான் வரேன்" என்றான் அஜய்.

"டேய், உன்னோட பதட்டம் எனக்கு புரியுது , எனக்கும் அதே பதட்டம் தான், ஆனா வெளில காட்டிக்காம இருக்கேன், கண்டிப்பா அந்த கொலைகாரனை என் கையால் தான் புடிப்பேன் டா. நான் நம்ம மணி டீக்கடை ல இன்னும் ஒரு 30 நிமிஷத்துல வரேன், நீயும் வா" என்றான் விஜய்.

அஜய் எதைப்பற்றியும் யோசிக்காமல் உடனே கிளம்பினான்.

இதற்கிடையே ப்ரீத்தா அசோக் தங்கைக்கு போன் செய்தாள் .

"சாய்ஸ்ரீ பேசறீங்களா," என்றாள் ப்ரீத்தா.

"ஆமாம், சாய்ஸ்ரீ தான் பேசறேன், நீங்க " என்றாள் சாய்ஸ்ரீ .

"நான் ப்ரீத்தா , திருமுல்லைவாயில் ஸ்டேஷன் எஸ் ஐ . கென் யூ ப்ளீஸ் கம் டு கீழ்பாக் மெடிக்கல் காலேஜ். லிட்டில் அர்ஜென்ட் " என்றாள் ப்ரீத்தா.

"ஏன் மேடம் என்ன பிரச்சனை சொல்லுங்க , எனக்கு இங்க ஹாஸ்டல் ல இருந்து வெளில விடமாட்டாங்க. " என்றாள் சாய்ஸ்ரீ.

"நீங்க உங்க வார்டன் கிட்ட போயிட்டு எனக்கு கால்பேக் பண்ணுங்க, நான் பேசுறேன்" என்றாள் ப்ரீத்தா.

"சரி மேடம்" என்றபடி வார்டனை நோக்கி நடந்தாள் சாய்ஸ்ரீ.

"மேடம், உங்ககிட்ட பேசணுமாம், திருமுல்லைவாயில் ஸ்டேஷன் ல் இருந்து" என்றபடி போனை வார்டானிட கொடுத்தாள் சாய்ஸ்ரீ.

ப்ரீத்தா பேசியதும் வார்டன் "சரி மேடம், அப்படியே பண்றேன்" என்றபடி போனை கட் செய்துவிட்டு "சாய்ஸ்ரீ, நீ இங்கேயே இரு, நான் வரேன்" என்று சொல்லிவிட்டு ஒரு கால் டாக்சி புக் செய்தாள் வார்டன் . கால் டாக்சி வந்தவுடன் "சார், இந்த பொண்ண கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் ல விடணும் , அங்கே எஸ் ஐ ப்ரீத்தா அண்ட் எஸ் ஐ விஜய் இருப்பாங்க, இது அவங்க நம்பர் , ரீச் ஆனதும் இந்த நம்பர் க்கு போன் பண்ணி சொல்லுங்க " என்று சொன்னாள் வார்டன்.

என்ன நடக்கிறது என்று புரியாமல் பதட்டமாய் இருந்தாள் சாய்ஸ்ரீ.

கால் டாக்சி புறப்பட்டது .

அதன்பிறகு வார்டன் ப்ரீத்தாவிற்கு கால் செய்தாள் "மேடம், சாய்ஸ்ரீ கிளம்பிட்டா , நான் எதுவும் சொல்லல மேடம், ஆனா ஒரு விஷயம் மேடம், அந்த அசோக் சாய்ஸ்ரீ கு சொந்த அண்ணன் இல்ல மேடம். சாய்ஸ்ரீ அஹ் எம் என் டீ என் புதுச்சேரி ஆஸ்ரமத்துல இருந்து படிக்க வைக்க தத்து எடுத்த அண்ணன் தான் , " என்றாள் .

"அப்படியா, சரி, நாங்க பாத்துக்கறோம் , நீங்க காலேஜ் ல இன்பார்ம் பண்ணிடுங்க " என்றபடி போனை கட் செய்தாள் ப்ரீத்தா.

அந்த நேரம், அஜய் ப்ரீத்தாவிற்கு கால் செய்தான்.

"ப்ரீத்தா எங்கே இருக்க" என்றான்.

"அஜய், நானே உனக்கு சொல்லணும் னு இருந்தேன், பட் பிஸி ல சொல்ல முடில, நான் கீழ்பாக் மெடிக்கல் காலேஜ் ல இருக்கேன். அசோக்......" சொல்லி முடிப்பதற்குள் "அது எனக்கு தெரியும், " உன்ன பாக்கணும் உடனே " என்றான் அஜய்.

"கொஞ்சம் லேட் ஆகும், நானும் விஜய் அண்ட் சாய்ஸ்ரீ உன்னோட வீட்டுக்கு வரோம். ஆனா அர்ச்சனா கிட்ட நான் கோவமா இருக்கேன், வந்து சொல்றேன்" என்றாள் ப்ரீத்தா.

"அப்போ விஜய் கூட இப்போ மணி டீக்கடைக்கு வரமாட்டானா , வரேன் னு சொன்னானே" என்றான் அஜய்.

"இல்ல, அவனுக்கும் லேட் ஆகும், சரி, நான் அப்புறம் பேசறேன்" என்றாள் ப்ரீத்தா.

அஜய்க்கு இருப்பு கொள்ளவில்லை . நேராக கீழ்பாக்கம் மெடிக்கல் காலேஜ் நோக்கி தனது காரை செலுத்தினான் .

பகுதி 2 முடிந்தது.

எழுதியவர் : நிழலின் குரல் (20-Apr-24, 11:10 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 35

மேலே