கண்கள் தொடுக்கும் காதல் பாகம் - 22
கண்கள் தொடுக்கும் காதல் : பாகம் - 22
" மெய்யான காதலை பொய்யான வர்ணனை கவிதைகளை கவிஞர்கள் தான் எழுதுவார்கள், பேசுவார்கள் " , அக்காவுக்கு குறைமாத பேர்கால வலி வந்து விட்டதாக காதலுக்காக ஒரு பொய்யான தகவலை சொல்லி விடுமுறை கேட்டது மனதை உறுத்த வருத்தப்பட்டு ஊர்க்கு கிளம்பியவன் பொதிகை விரைவு வண்டியில் இதோ வந்து விட்டான்
கெளதமை கண்டவுடன் திரிஷாவின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வந்தது.. அழுதாள் அவள் ஆதங்கம் குறையும் என்று நினைத்தவன் ஏதுமின்றி அசைவற்று நின்றான்..
மெல்ல பேச ஆரம்பித்தாள்..அப்பா என் உயிர் போகும் அளவுக்கு வயிற்றிலே மிதித்து விட்டார் என்று ஆரம்பித்து நடந்தவற்றை மூச்சு விடாமல் சொல்லி முடித்த திரிஷா....
நம் காதல் கைகூட வேண்டும் கெளதம்...என்னை உன் வீட்டுக்கு கூட்டிட்டுபோ.. என்று அழுதாள்
கெளதம் திரிஷாவை பார்த்து.... நம் காதல் ,காதலன் என்னால் வந்தது இல்லை உன் உடல் உயிர், அப்பா அம்மா காதலால் உருவாக்கப் பட்டு, சுமந்து ,பெற்று,வளர்த்த உடல் உயிர்..அதை திருட்டுத்தனமாக கையாடல் செய்ய நான் யார்? , உன்னை முழுவதுமாக அள்ளிச் செல்ல காதலன் என்கிற ஒரு தகுதி போதுமா?.. என்றான்...
அதற்கு அவள் என்னை எங்கயாவது கூட்டிட்டு போ... என்னால் அப்பாவிடம் அடிபட்டு சாக முடியாது... என்றாள் திரிஷா..
அடிச்சது யார்? உன் அப்பாதான ... உன்னை அடிச்சு மிதிக்க அவருக்கு உரிமை இல்லை.. உன்னை கள்ளத் தனமாக கூட்டிட்டு ஓட எனக்கு என்ன உரிமை இருக்கு ? என்றான் கெளதம்
காதலன் என்கிற உரிமை இருக்கே ...அது போதாதா என்றாள் திரிஷா..
உங்க அம்மா பத்து மாதம் சுமந்து மீள் பிறப்பெடுத்து பெத்தாங்களே அந்த தாய்க்கு நிகர் இந்த காதலனா ? , கை நோக இரவும் பகலும் சுமந்து, கையை பிடித்து நடக்க வைத்து , மடியிலும் தோளிலும் சுமந்த அப்பாவுக்கு நிகரா ? இந்த காதலன்.ஆலமரத்தையும் பிள்ளையாரையும் 1008 சுற்று சுற்றி தவமிருந்து பெற்றதை விடவா ? காதல் சக்ஸஸ்க்கு காத்திருக்கும் பிரிவு பெரியது ? என்று அடுக்கிக் கொண்டே போனான் கெளதம்..
அமைதியாக இருந்த திரிஷாவுக்கு சற்று முன் ஆட்டோவில் வந்து சென்றவர்கள் மனத்திரையில் ...
ஆட்டோ ஒன்று அங்கு வந்து நிற்க..
திரிஷாவுக்கு சிறிதாக அச்சம் தலை தூக்க , மேனி நடுங்க ஆரம்பித்தது , கோமதி அம்மனை வணங்கிட மனத் தைரியம் அவளுக்குள் எரிமலையாக🌋 வெடித்து வெளியானது..
நின்ற ஆட்டோவில் இருந்து புளியங்கொட்டை நிறத்தில் கருமையாக , பலாப்பழம் போல் உருவம் இல்லாத தலையுமாக , குபேரன் வயிறுமாக இருவர் இறங்க அதில் ஒருவன் திரிஷாவை பார்த்தவாறு wow " இரவில் வரவேண்டிய நிலா கதிரவன் உதிக்கும் நேரத்தில் அதுவும் பூமியில் பிரகாசிக்கின்றனவே.. என்றவாரே அவள் அருகே சென்றான், மற்றொருவன் நெருஞ்சிக் காட்டின் மத்தியில் பூத்துக் குலுங்கும் வெண்மை நிற தாளம் பூவே என்று அவளின் கையைப் பிடிக்க சென்றவனை..
மற்றோர் கை தடுத்தது..ஆட்டோ ஓட்டுநர் ..கை தான் அது.. ஓட்டுநர் அவள் முகத்தை பார்த்தவனுக்கு கமலின் முகச்சாடை தெரிய வர ..பாப்பா நீங்க அபிராமி டிராவல்ஸ் கமல் அண்ணாச்சி மகளா ? என்றான்... ஆமாம் என்பதை போல் தலையாட்டினாள்..
முரடன்களை பார்த்து திரும்பிய ஆட்டோ டிரைவர் அந்த பெண்ணோடு அப்பா Ex Army, ஆளுங் கட்சி பிரமுகர், ஓட்டுநர் சங்க பிரமுகரென பல முகங்களைக் கொண்டு சங்கரன்கோவில் நகரையே ஆட்டி படைக்கிற கமல் அண்ணாச்சி பொண்ணு இது, இந்த பெண்ணைத் தொட்ட
" உடம்பில் உயிர் மட்டுமில்லை,உன் பிறப்பு இறப்பு ரெக்கார்டு இருக்காது " பார்த்துக்கோ..போங்கடா என்று விரட்டியவன் திரிஷாவிடம் மன்னிச்சிருமா..என்று கையெடுத்து கும்பிட்டு அப்பாவிடம் இதைப் பற்றி சொல்லாதீங்க பாப்பா என்றான்.. சரியென்று தலையாட்டினாள் திரிஷா..
கமலை வீட்டிற்குள் பாசமான அப்பாவாக பார்த்தவளுக்கு , வீட்டுக்கு வெளியே இருக்கும் முக்கியஸ்தர்களில் ஒருவர் என்பதை புரிந்து கொண்டவள் .. அப்பாவிடம் சிக்கும் கெளதம் நிலை என்னவாகும் என்று சிந்திக்க தொடங்கினாள்..
திரிஷா முடிவுதான் என்ன?..
.. தொடரும்
சமத்துவ புறா ஞான அ பாக்கியராஜ்
மேலக்கலங்கல்
தென்காசி மாவட்டம்