காண்டு தாண்டு

நண்பா நரேசு, போனவாரம் பிறந்த உன்


பையனுக்குப் பேரு வச்சுட்டீங்களா?

@@@@@@

இல்லடா. இன்னிக்கு செய்தித்தாள்ல ஒரு

இந்திப் பேரைச் பார்த்தேன். அந்தப்

பேருக்குப் பின்னாடி 'காண்டு'ங்கிற

பேரையும் பார்த்தேன். நம்ம ஊர்ல எந்த

ஆண் குழந்தைக்கும் யாரும் வைக்காத

பேரா என் பையனுக்கு வைக்கணுங்கிற

என் கனவுக்கு இன்னிக்கு விடை

கிடச்சிருச்சு. என் அருமைப் செல்லத்தின்

பெயர் 'காண்டு, காண்டு, காண்டு'.


@@@@@@

நானுந்தான்டா அந்தப் பேரைச்

செய்தித்தாள்ல பார்த்தேன். நேற்றுப்

பிறந்த என் பையனுக்கு அந்தப் பேரை

வைக்கலாம்னு ஆசையா இருந்தேன். உம்.

நீ முந்திட்ட.

@@@@@@@

பாரவாயில்லடா. என் பையன் 'காண்டு'னா

நெருங்கிய என் நண்பனான உன்

பையனுக்குத் 'தாண்டு'னு வையுடா.

இரண்டுமே இந்திப் பேருக்கு சொன்னால்

போதும் நம்ம ஊரு மக்கள் எல்லாம்

'காண்டு', 'தாண்டு' "அருமையான பேருங்க.

சுவீட்டு நேம்சு"னு பாராட்டுவாங்க.

@@@@@@@

அருமை. அருமை. ஆமாம் இந்தப்

பேருங்களுக்கு என்ன அர்த்தம்னு கேட்டா

என்னடா சொல்லறது?

@@@@@@@

நம்ம ஊர்ல எத்தனை பேரு அர்த்தம்

தெரிஞ்சு இந்திப் பேருங்களை அவுங்க

குழந்தைகளுக்கு வச்சிருக்கிறாங்க?

இந்திப் பேருங்களை

பிள்ளைகளுக்கு வைக்கிறது தான்

தமிழர்கள் நாகரிகம். யாரும் இந்திப்

பேரோட அர்த்தத்தைப் பற்றி

கவலைப்படுவதில்லைடா. தமிழ்ப் பேரை

வைக்கக்கூடாது. உலகத் தமிழர்கள்ல

95% தமிழர்கள் அவுங்க பிள்ளைகளுக்கு

இந்திப் பேருங்களை வைக்கிறதை

கட்டாய விதியா (சட்டம்) நெனச்சு

பிள்ளைகளுக்கு இந்திப் பேருங்களை

வைக்கிறாங்க. இந்திப் பேருங்க மாதிரி

உள்ள பேருங்களை உருவாக்கிவதில்

கடுமையான போட்டி.

எழுதியவர் : மலர் (3-Jun-24, 5:22 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 30

மேலே