மாலில் மாலா

புடவை கடையில்:

வியாபாரி: என்னமாதிரி சாரி பாக்கறீங்க?
மாலா: நான் இதுவரை கட்டாத சாரி.
வியாபாரி: அப்படீன்னா, காட்டாங்குளத்தூர் காட்டன் சாரி பாக்கறீங்களா?
மாலா: இப்போ நான் கட்டியிருப்பதே காட்டாங்குளத்தூர் காட்டன் சாரி தான்.
வியாபாரி: ???

குர்தி சுடிதார் கடையில்:

வியாபாரி: குர்தி சுடிதார் யாருக்கு வேணும்?
மாலா: நான்தான் வாங்க வந்திருக்கேன். எனக்குதான் வேணும்
வியாபாரி: அப்போ இந்தாங்க 34 சைஸ் போட்டுப்பாருங்க.
மாலா: பதினாறு வயசு பொண்ணு போடற சைஸ் கொடுங்க.
வியாபாரி: ஐயோ, உங்களுக்கு அது ரொம்ப சின்னதா இருக்கும்
மாலா: அதை பத்தி உங்களுக்கு என்ன, நான் கேட்டதை கொடுங்க
வியாபாரி: இந்தாங்க, நிறைய கலர்ல டிசைன்ல இருக்கு. ஆனால் நீங்க இதை போட்டு பார்த்தீங்கன்னா அதை கண்டிப்பா நீங்க எடுத்துக்கணும்.
மாலா: நான் சும்மா பாக்கத்தான் கேட்டேன். என்னிடம் ஐம்பது குர்தி சுடிதார் செட் இருக்கு.
வியாபாரி: ???

முகப்பூச்சு பொருட்கள் கடையில்:

வியாபாரி: இந்தாங்க இந்த முகப்பூச்சு புதுசா வந்திருக்கு. இதை ஆறு மாதம் தொடர்ந்து போடீங்கன்னா, உங்களுக்கு ஆறு வயசு குறைந்துவிடும்.
மாலா: எனக்கு ஆறுமாசம் தொடர்ந்து போட நேரம் கிடையாது. ஐந்து நிமிஷத்தில் போடுறமாதிரி நல்ல முகப்பூச்சு காட்டுங்க.
வியாபாரி: ???

அன்பளிப்பு பொருட்கள் கடையில்:

மாலா: என் தோழி பாரதிக்கு நாளைக்கு பொறந்த நாள். நல்ல அன்பளிப்பா காட்டுங்க.
வியாபாரி: இந்தாங்க இந்த தஞ்சாவூர் ஆடும் பெண் பொம்மையை கொடுங்க.
மாலா: அவள் அப்படி பட்ட பொண்ணு இல்ல. அவள்தான் அவள் கணவனை ஆடி வைப்பாள்.
வியாபாரி: அப்போ இந்தாங்க இந்த பொட்டிப்பாம்பு பொம்மை.
மாலா: பாம்புன்னா என் தோழிக்கு பயம் எனக்கும்தான். அதனால், அந்த பாம்பை எடுத்துட்டு, வெறும் பொட்டியை மட்டும் கொடுங்க.
வியாபாரி: இதுல இருக்கிறது பல்லை பிடுங்கிய பாம்பு தாங்க.
மாலா: அப்படீன்னா பரவாயில்லை. தாங்க.

வேக உணவு கடையில்:

மாலா: வேகமாக சூடான பில்டர் காபி கிடைக்குமா?
வியாபாரி: பத்து செகண்ட் காபின்னா அம்பது ரூபா , இருபது செகண்ட் காபின்னா முப்பது ரூபாய், நாற்பது செகண்ட் காபின்னா இருபது ரூபாய்.
மாலா: எனக்கு ரெண்டு நிமிஷம் டைம் எடுத்துண்டு பத்து ரூபாய் காபி கொடுங்கள்.
வியாபாரி: ???

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Jun-24, 4:11 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 17

சிறந்த நகைச்சுவைகள்

மேலே