ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால்

ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால்?
ஒன்றேதான், ஏனெனில் ஒன்றாகிவிடும் தானே!

இரண்டும் இரண்டும் சேர்ந்தால்?
சதுரமாகிவிடும், சரிதானே!

மூன்றும் மூன்றும் சேர்ந்தால்?
இதுகூட தெரியாதுங்களா, எட்டுதானே ஆகும்!

நாலும் நாலும் சேர்ந்தால்?
படிக்கட்டுகள் ஆகிடும், என்ன சரியா?

ஐந்தும் ஐந்தும் சேர்ந்தால்?
பத்துன்னுதானே சொல்றீங்க.
இல்லை ஐம்பத்தைந்து.

ஆறும் ஆறும் சேர்ந்தால்?
பன்னிரண்டும் இல்லை அறுபத்திஆறும் இல்லை
சரியான விடை, பெரிய ஆறு.

ஏழும் ஏழும் சேர்ந்தால்?
ரொம்ப சுலபம், ஒரு நுழைவாசல்

எட்டும் எட்டும் சேர்ந்தால்?
ஒண்ணுக்குமேலே ஒண்ணு, நாலு கோலிகள்

அப்போ ஒம்போதும் ஒம்போதும் சேர்ந்தால்?
காதை பக்கம் கொண்டாங்க: அலி கூட்டணி

முடிவாக கேட்கிறேன், பத்தும் பத்தும் சேர்ந்திச்சின்னா?
மிகவும் ஈஸியான விடை: ரெண்டு கட்டை ரெண்டு பந்து

(ஒரு பென்சில் பேப்பர் வைத்துக்கொண்டு கேள்விக்கு விடை தேடினால், மேற்கூறிய விடைகள் மிகவும் சுலபமாக விளங்கிவிடும், ஓரிரு பெனாத்தல் பதில்களை தவிர)

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (24-Jun-24, 7:41 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 22

சிறந்த நகைச்சுவைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே