டிஎம்எஸ் எஸ்பிபி

டிஎம் சௌந்தர்ராஜனும் எஸ் பி பாலசுப்ரமணியமும் மேலோகத்தில் ( சொர்க்கமா நரகமா என்று தெரியாது) சந்திக்கிறார்கள். டிஎம்எஸ் தொய்வடைந்த குரலில் பாடுகிறார் (நல்லவர் குரலுக்கு மதிப்பிருக்கும் என்ற பாடல் மெட்டிலே) ' டிஎம்எஸ் குரலுக்கு என்றும் மதிப்பிருக்கும் தமிழ் நாட்டிலே'.
எஸ்பிபி தொண்டையை கனைத்துக்கொண்டு கொஞ்சம் இருமிவிட்டு 'தொரக்குன்னா இட்டுவண்டிசேவா' என்ற தெலுங்கு பாடல் மெட்டில் கொஞ்சம் குறைந்த சுருதியுடன் பதிலுக்கு பாடுகிறார் " எஸ்பிபி குத்தான் தமிழ்நாட்டில் மவுசு. உங்க குரல் ரொம்ப பழசு ".
இதை கேட்டுவிட்டு டிஎம்எஸ் கிடுகிடுவென்று ஜீ ராமநாதன் இருக்கும் இடத்திற்கு விரைகிறார், அவரிடம் இதுபற்றி தீர்ப்பு கேட்க.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (23-Jun-24, 11:27 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 14

சிறந்த நகைச்சுவைகள்

மேலே