ராம்ராஜ் பனியன் போடாத காமராஜ்

இன்று பெருந்தலைவர் காமராஜ் பிறந்தநாள்
நாணயம் மறைக்கப்பட்ட, மற்றுமொரு நாள்
அதர்மம் அரியணை ஏறிய இன்னொரு நாள்
தர்மம் தர்மத்தை எங்கே என்று தேடிடும் நாள்

பெருந்தலைவர்கள் இன்று மறைந்து விட்டனர்
பெறும் தலைவர்கள் உயர வளர்ந்து விட்டனர்
வெறும் தலைவர்கள் எங்கும் மலிந்துவிட்டனர்
தரும் மனம் படைத்தவர் ஓடி ஒளிந்துவிட்டனர்

நேர்மை, வாய்மை, தூய்மை, எளிமை-காமராஜ்
எல்லாமும், எல்லார்க்கும்-காமராஜின் ராம்ராஜ்
அது அந்தக்காலம் என்பது இன்றைய உழல்ராஜ்
இன்று எவரேனும் உள்ளனரா ஓரிரு உத்தம ராஜ்?

இன்று கலிகாலமோ எலிகாலமோ பலிகாலமோ
நேர்மை, அங்கங்கே பதுங்கியேனும் வாழ்கிறது
அராஜகம் அநீதி அக்கிரமம் மற்றும் அநியாயம்
இதனிடையில் சிக்கியும் உயிர்வாழுது நியாயம்

நாணயத்தின் நாயகன் காமராஜரை வணங்குவோம்
வருங்காலத்தில் ராமராஜ்யம் மலர நாம் ஏங்குவோம்

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (15-Jul-24, 10:55 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 37

மேலே