காமினி தாமினி

ஏன்டப்பா கண்ணையா, உன்ற மகனுக்கு

திருமணம் ஆகி தவமிருந்து பத்து வருசம் கழிச்சு

இரட்டைப் பெண் குழந்தைகள்

பொறந்திருக்குது. அந்த

மகாலட்சுமிகளுக்கு என்ன சேருங்கள்டா

என்ற பேரன் ஆக்காசு வச்சிருக்கிறான்.


@@@@@@@@@

ஏம்மா, என்ற பையன் ஆக்காசு அவம்

பொண்ணுகளுக்கு 'காமினி, தாமினி'ன்னு

அழகான இந்திப் பேருங்கள

வச்சிருக்கிறான். ஒரு இந்தித்

தொலைக்காட்சித் தொடர்ல வர்ற

பெண்கள் பேரு 'காமினி, தாமினி'னியாம்.

அந்தப் பேருங்களத்தான் ஆக்காசு வச்சான்.

@@@@@

இரண்டு பிள்ளைகளுக்கும் இப்ப வயசு

அஞ்சு ஆகுது. இரண்டு பேருமே ஏதாவது

ஒரு பொருளை யாருக்கும் தெரியாமல்

எடுத்து வச்சுக்கராளாக. என்னடி எடுத்து

மறச்சு வச்சீங்கனு கேட்டா பதிலு

சொல்லறதில்லை. காமினியைக் கேட்டா

அவ எடுத்த பொருளைக் காட்டறதில்லை.

தாமினியைக் கேட்டா

அவ தரமாட்டங்கிறா. காமினி காட்டமாட்டா:

தாமினி தரமாட்டங்கிறா.

@@@@@@@

அம்மா, பிள்ளைகள் அவுங்க பேரு ராசிப்படி

நடந்துக்கிறாங்க.நாம என்ன செய்யா?

எழுதியவர் : மலர் (2-Aug-24, 8:04 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 43

சிறந்த நகைச்சுவைகள்

மேலே