நீங்க ஒருத்தர்

நான் ஒருத்தர் வீட்டுக்கு போயிருந்தேன். அவரிடம் கேட்டேன் "வீட்டில் நீங்க ஒருத்தர் மட்டும்தானா? அந்த ஒருத்தர் சொன்னார் "ஆமாம்". அப்போது வீட்டின் இன்னொரு அறையிலிருந்து ஒருவர் பேசுவது என் காதில் விழுந்தது. நான் கேட்டேன் "இன்னொருத்தர் இருக்கிறார்போல இருக்கிறதே உங்க வீட்டிலே? அவர் சொன்னார் " ஆமாம் இன்னொருத்தர் இருக்கிறார்." நான் கேட்டேன் " நான் கேட்டப்போ நீங்க ஒருத்தர் மட்டும்தானா இந்த வீட்டிலன்னு கேட்டபோது, ஆமாம் என்றீர்களே, இப்போ இன்னொருத்தரும் இருக்கிறார்னு சொல்றீங்க?".
அவர் சொன்னார் "ஆமாம் நான் ஒருத்தர் தான், அது இன்னொருத்தர்".
அதே நேரத்தில் மூன்றாவதாக ஒருவர் வீட்டில் நுழைந்து உள்ளே சென்றார். நான் ஒருத்தரை கேட்டேன் "அப்போ நீங்க மூணு பேரு இந்த வீட்டில இருக்கீங்க. அப்படித்தானே? அவர் சொன்னார் "நான் ஒருத்தர் தான் இருக்கேன்." நான் குழம்பி போய் "நீங்க ஒருத்தர், பக்கத்து அறையில் இன்னொருத்தர், இதோ இப்போ இன்னொருத்தர் உள்ளே நுழைந்து போனார். ஆக நீங்க ஒருத்தர் மட்டும் இல்லை, மொத்தம் மூணு பேரு இருக்கீங்க" என்று கேட்டேன்.
அவர் நிதானமாக சொன்னார் "நான் ஒருத்தர்தான், பக்கத்து அறையில் இன்னொருத்தர், இப்போ உள்ளே போனது மற்றும் ஒருத்தர். அவ்வளவுதான்".
இன்னும் அங்கே இருந்தால், நான் ஒருத்தனா இருக்கமாட்டேன்னு கொஞ்சம் குழப்பம் வந்துவிட்டதால், சொல்லிக்காமல் கொள்ளாமல் நான் அந்த வீட்டிலிருந்து வெளியே நழுவினேன். அதே நேரத்தில் இன்னுமொரு மற்றுமொருத்தர் அந்த வீட்டிற்குள் நுழைந்தார்.

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (30-Jul-24, 6:43 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : nenga oruthar
பார்வை : 48

சிறந்த நகைச்சுவைகள்

மேலே