ஓட்டப்பல்லு உய்யான்
வாடா ஓட்டப்பல்லு உய்யான். நீ என்னடா
அரசியல்வாதி ஆயிட்டயாம்.
@@@@@
ஐயா, என்னை வாடா போடானு
சொல்லாதீங்க. நான் பிரபல ரவுடினு
உங்களுக்கு நல்லாத் தெரியும். அதுவும்
ரவுடித்தனம் பண்ணி திருடறுதல உயர்
சிறப்பு நிபுணர். மூக்குத்தியத் திருடறது,
குழந்தைகள் கழுத்துல இருக்கிற ஒரு
பவுன் சங்கில காதில் இருக்கிற இடுக்கண்
திருடற சில்லரைத் திருடனோ சில்லரை
ரவுடியோ கிடையாது. கோடீஸ்வரப்
பெண்கள் அணிஞ்சிருக்கிற விலை
உயர்ந்த நகைகளை மட்டும் திருடுகிற
உயர் சிறப்பு நிபுணர். நான் ரவுடி, திருடனா
இருந்தாலும் ஒரு தலைவரின் அழைப்பின்
அவரது கட்சியிலே சேர்ந்தேன். உடனே என்
தகுதிக்கேற்ற பதவி. மாநில அறிவுசார்
குழுவின் உயர் சிறப்பு தலைவர். என்னை
இனிமேல் மரியாதைக் குறைவா வாடா
போடானு கூப்புடாதீங்க.
@@@@@@@@
சரிங்க ஓட்டப்பல்லு உய்யாரே.